Saturday, February 25, 2017


என்னது 'பழனிச்சாமி' முதல்வரா? வெட்கமாக இல்லையா? சாவதே மேல்- கட்ஜூ கொந்தளிப்பு





டெல்லி: சிறைக் கைதியாக உள்ளவரின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக எப்படி ஏற்க முடியும்? அதற்கு செத்துவிடுவதே மேல் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மிக காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மார்க்கண்டேய கட்ஜூ பதிவிட்டுள்ளதாவது:

அன்பார்ந்த தமிழர்களே!

ஜெயில் கைதியின் தலையாட்டி பொம்மை உங்களது முதல்வராக இருக்கிறாரே... நீங்கள் எதுவுமே செய்ய மாட்டீர்களா?


நீங்கள் அனைவரும் சேர, சோழ, பாண்டிய பேரரசர்களின் வாரிசுகள். நீங்கள் வீழ்ந்து போனால் உங்களுடைய மூதாதையர்களுக்கு அவமானம் அல்லவா?

திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், ஆண்டாள், பாரதியார் ஆகிய மூதாதையர்களின் வழிவந்தவர்கள் நீங்கள். இப்படி ஒரு முதல்வரை ஏற்றுக் கொண்டது உங்களுக்கு அவமானம் இல்லையா?


நானும் தமிழன் என்று கர்வமாக கூறி வந்தேனே... இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இப்படி சொல்வேனோ?

நான் பகிரங்கமாகவே சொல்கிறேன்... பழனிச்சாமி தமிழக முதல்வராக நீடிக்கும் வரை நான் தமிழனாக இருக்கப் போவதில்லை. அவமானம், அவமரியாதை பற்றிய கவலை இல்லாத ஒரு சமூகத்தில் நானும் ஒருவனான வாழ மறுக்கிறேன்... இதற்கு நான் செத்துப் போவதே மேல்

இவ்வாறு கட்ஜூ காட்டமாக எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024