Saturday, February 25, 2017

குற்றவாளியின் தாயை தண்டித்த நீதிபதி!



அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் சாலை விபத்து குறித்த வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அமெண்டா கோசல் என்ற பெண், இரவில் குடித்து விட்டு கார் ஓட்டியுள்ளார். எதிரே நடந்து வந்துகொண்டிருந்த தம்பதியை கார் இடித்ததில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த வழக்கை நீதிபதி விசாரணை செய்து கொண்டிருக்கும்போது இடையூறு செய்யும் வகையில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அமெண்டாவின் தாயார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர், வழக்கு தொடர்பாக விசாரிக்கப்படும் சாட்சிகளைக் கிண்டலடித்து நீதிமன்றத்தில் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி, இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இதுபோன்ற வினோதமான சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024