ஜியோவின் அடுத்த டார்கெட் கால்டாக்ஸி
தொலைத்தொடர்பு தொழிலைத் தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டில் கால்டாக்ஸி தொழிலில் கால்பதிக்கவுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே 600 க்கும் மேற்பட்ட கார்களை வாங்கியுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களான டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக கால்டாக்ஸி தொழிலை தொடங்கவுள்ளது. ஜியோவின் இந்த வருகையால் உபர், ஓலா உள்ளிட்ட கால்டாக்ஸி நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என்று தெரிகிறது. ஜியோ கால்டாக்ஸியில் குறைந்த கட்டணம், இலவச Wifi உள்ளிட்ட சேவைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உபர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் குறைவான கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜியோவின் வருகை கால்டாக்ஸி ஓட்டுநர்களையும், உரிமையாளர்களையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே ஜியோவின் வருகையால், ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ள நிலையில், கால்டாக்ஸியிலும் ஜியோ கால்பதிக்கவுள்ளது போட்டி நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Dailyhunt
No comments:
Post a Comment