சென்னை ரயில் விபத்துக்கு காரணமாக இருந்த ஏணி அகற்றம்
சென்னை: சென்னை பரங்கிமலை- பழவந்தாங்கல் இடையே செல்லும் மின்சார ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 3 பேர் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பான விவகாரத்தில் இளைஞர்களை உரசியாக கூறப்படும் சிக்னல் ஏணி இன்று அகற்றப்பட்டது.
தாம்பரம் - கடற்கரை மார்க்கமாக செல்லும் மின்சார ரயில்களில் காலை நேரங்களில் கூட நெரிசல் காணப்படும். இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் மின்சார ரயிலில் பரங்கிமலையில் ஏறிய இளைஞர்கள் சிலர் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
அப்போது பழவந்தாங்கலை ரயில் நெருங்கும் போது சிக்னல்சி அருகே இருந்த ஏணி உரசியதில் 7 பேர் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் உடல் துண்டாகி உயிரிழந்தனர்.
ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காயமடைந்த 4 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குரோம்பேட்டை மருத்துமனையிலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணியம் நேரில் சென்ற விசாரணை நடத்தினார்.
மார்ச் 1-இல் விசாரணை
3 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் சிக்னல் அருகே இருந்த ஏணி இன்று அகற்றப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் வரும் மார்ச் 1-ஆம் தேதி பார்க் டவுனில் விசாரணை நடத்தவுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. விபத்தை நேரில் பார்த்தவர்களும் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் முறையிடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source: oneindia.com
Dailyhunt
No comments:
Post a Comment