Friday, March 10, 2017

விஜய் மல்லையா. | கோப்புப் படம்.

ஒரே தவணையில் கடன் தொகையை செலுத்தத் தயார்: வங்கிகளை சமரசத்துக்கு அழைக்கிறார் விஜய் மல்லையா

பிடிஐ

வங்கிகளிலிருந்து பெற்ற ரூ.9,000 கோடி கடன் விவகாரத்தில் ஒரே தவணையில் கடனை திருப்பித் தருவதற்கு வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“ஒரே தவணையில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கொள்கை பொதுத்துறை வங்கிகளிடத்தில் உள்ளது. நூற்றுக்கணக்கான பேர் கடனை இவ்வாறு திருப்பிச் செலுத்தியுள்ளனர். எங்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுவது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் இதற்கான கோரிக்கையை வைத்தப் போது வங்கிகள் பரிசீலிக்காமல் ஏற்க மறுத்து விட்டன. நியாயமான முறையில் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு நான் பேச்சு வார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறேன்.

எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு வங்கிகளுக்கு பேச்சுவார்த்தைக்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது நீதிமன்றத்தின் ஒவ்வொரு உத்தரவுக்கும் தான் பணிந்து நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ‘நியாயமான விசாரணையின்றி அரசுதான் என்னைக் குற்றவாளியாக்க முயற்சிப்பது போல் தெரிகிறது.

அட்டர்னி ஜெனரல் எனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் எனக்கு எதிரான அரசின் அணுகுமுறையைக் காட்டுகிறது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வியாழனன்று மல்லையாவிடம் உச்ச நீதிமன்றம், அவர் சமர்ப்பித்த சொத்து விவரங்கள் உணமையானதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தது.

பல்வேறு வங்கிகளுக்கு மல்லையா வைத்துள்ள கடன் தொகை ரூ.9,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் அவர் மார்ச் 2-ம் தேதி இந்தியாவை விட்டு அயல்நாட்டுக்கு வெளியேறினார்.
முதல்வர் பழனிசாமியுடன் சிங்கப்பூர், ஜப்பான் தூதர்கள் சந்திப்பு



முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளின் தூதர்கள் இன்று சந்தித்துப் பேசினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சென்னையிலுள்ள ஜப்பான் தூதர் சைஜி பாபா மரியாதை நிமித்தமாக முதல்வர் பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, சென்னையிலுள்ள ஜப்பான் துணைத் தூதர் ஹிரோகோ டானிகூச்சி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.



இதேபோல் சென்னையிலுள்ள சிங்கப்பூர் தூதர் ராய் கோ மரியாதை நிமித்ததாக முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்காக தனது வாழ்த்துகளை தெரிவித்து, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை வழங்கினார்.

தமிழகத்தில் 35,000 போலி மருத்துவர்கள்!

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அவர்களைக் கண்டுபிடிக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு 150-க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.



இந்நிலையில், தமிழகத்தில் 35,000 போலி மருத்துவர்கள் உள்ளனர் என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, போலி மருத்துவர்களை ஒழிக்க தனி சட்டம் வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது. மேலும், அவர்களுக்கு ஆறு மாத சிறைக்குப் பதில் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

விடுமுறைக்கு இப்படியும் ஒரு காரணமா? - வைரலாகும் பள்ளி மாணவனின் கடிதம்


அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever. அது மாறவே மாறாது.

ஒரே நாளில் காய்ச்சல் வந்து அதேநாளில் அது குணமாகியும் விடும் ஆச்சர்யத்தைச் சந்திக்காத மாணவர்களே இருக்க முடியாது. தேர்வு நேரத்தில் வரும் காய்ச்சலை 'எக்ஸாம் ஃபீவர்' என்று சொல்வதைப் போல விடுமுறைக்காக வரும் காய்ச்சலை 'லீவ் ஃபீவர்' என்றும் சிலர் சொல்வர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால்தான் ஆசிரியர் விடுமுறை அளிப்பார் என்று நினைத்து இந்தக் காரணத்தை பல மாணவர்கள் எழுதுவார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு வயிற்று வலி என்பதையோ, உறவினர் திருமணத்திற்குச் செல்லவிருக்கிறோம் என்பதையோ ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் i am suffering from fever என்றே எழுதுவர். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் ஈஸ்வரன் மட்டும் இதில் விலக்கு.

தேனி மாவட்டம், வருஷ நாடு அருகில் இருக்கும் பூசணியூத்து எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார் ஈஸ்வரன். ஈஸ்வரனின் வீடு, பள்ளியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சிங்கராஜபுரம். அங்கிருந்து பள்ளிக்கு வருவதற்கு பேருந்து வசதி கிடையாது. ஆட்டோ மூலமே செல்லமுடியும். ஆனால் ஈஸ்வரன் ஆட்டோவை எல்லாம் எதிர்ப்பார்ப்பது இல்லை. நடந்தே பள்ளிக்கு வந்துவிடுகிறான். ஈஸ்வரனின் அண்ணன்களும் அதே பள்ளியில்தான் படிக்கிறார்கள். மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் நன்றாக படிக்கும் மாணவராக மட்டுமல்லாமல் சக மாணவர்களோடு தோழமையோடும் உதவும் தன்மையோடும் பழகுவார்.

அந்தப் பள்ளியின் ஆசிரியர் வி.வெங்கட் இரண்டு நாட்களுக்கு முன், வகுப்பில் வருகைப் பதிவு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒரு மாணவர் விடுப்பு விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்கிறார். அந்த வகுப்பில் படிக்கும் மாணவர் ஈஸ்வரன் தனக்கு ஒருநாள் விடுப்பு கேட்டு எழுதிய கடிதத்தை தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்.

மாணவர்கள் எழுதும் வழக்கமான விடுப்பு விண்ணப்பம்தானே என்று நினைத்து அதைப் படித்த ஆசிரியருக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது அந்தக் கடிதம். தனது அம்மாவுக்கு உடல்நிலைச் சரியில்லாத காரணத்தால் தன் வீட்டில் இருக்கும் கால்நடைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விடுமுறை கேட்டு விடுப்பு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார் ஈஸ்வரன். தனது விடுமுறைக்கான உண்மையான காரணத்தையே ஈஸ்வரன் எழுதியிருந்ததைக் கண்டு திகைத்தார் ஆசிரியர் வெங்கட்.




"இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு சில நிமிடங்கள் ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டேன். இப்படி ஒரு காரணம் எழுதிய லீவ் லட்டரை நான் முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த ஈஸ்வரனிடம் வழக்காக இந்தக் காரணத்தை எழுதமாட்டார்களே... நீ எப்படி எழுதினாய், என்றேன். அதற்கு மிக இயல்பாக, 'சார், நீங்கதானே உண்மை எதுவாக இருந்தாலும் அதை பேசுங்க என்பீர்கள்' என்றான். எனக்கு பதில் பேசுவதற்கு வார்த்தை கிடைக்கவில்லை. கண்களில் என்னையறியமால் நீர் வழிந்தது. அதை மாணவர்கள் முன் காட்டிக்கொள்ளாமல், ஈஸ்வரனின் கடிதத்தைப் பற்றி சிலாகித்துக் கூறினேன். எப்போதோ நாம் சொல்லும் வார்த்தை மாணவர்களின் மனதில் எவ்வளவு ஆழமாக பதிகிறது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் பல மடங்கு பொறுப்புஉணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளவும் முடிந்தது" என்கிறார் ஆசிரியர் வெங்கட்.

ஆசிரியர் சொல்வது உண்மைதான். ஈஸ்வரனின் செயல்பாட்டுக்கு ஆசிரியர் - மாணவர் உறவு ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையான காரணம். கால்நடைகளைப் பார்த்துகொள்வதற்காக விடுப்பு எடுக்கிறேன் என்று சொல்வதற்கு பின்னால், அந்தக் காரணத்தின் சூழலை தன் ஆசிரியர் புரிந்துகொள்வார் எனும் நம்பிக்கையே இருக்கிறது. இந்த நம்பிக்கை ஒரிரு நாள்களில் வந்துவிடக் கூடியது அல்ல. ஜனநாயகத் தன்மையோடு வகுப்பறையை ஆசிரியர் கொண்டுச் செல்லும்போதே இது நிகழும். அதற்கான வாய்ப்புகளை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதும் பாராட்டுக்கு உரியது. இதுபோன்ற சூழல்களே மாணவர்களின் படைப்புத் திறனை வளர்த்தெடுத்து புதிய விஷயங்களை கண்டுபிடிக்க உதவும்.

உண்மையின் ஒளியில் பயணம் செய்வதை விடவும் மகிழ்வானது எதுவுமில்லை. உற்சாகத்துடன் அந்தப் பயணத்தில் இருக்கும் ஈஸ்வரனுக்கு அன்பு வாழ்த்துகளைச் சொல்வோம்.

பெண்களுக்கு ஓர் நற்செய்தி


பெண்களுக்கு ஓபெண்கள் பேறுகால விடுப்பை ஆறு மாதங்களாக்கும் ‘மகப்பேறு சீர்திருத்த மசோதா 2016’ (Maternity Benefit Amendment Bill), மார்ச் 9-ம் தேதி (நேற்று) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.



அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் பேறுகால விடுப்பு மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 12 வார மகப்பேறு விடுமுறை இனி 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மாதத்துக்கும் சம்பளம் உண்டு. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு தற்போது இருக்கும் 12 வார விடுமுறை வழங்கப்படும்.

ர் நற்செய்தி

டிராபிக் ராமசாமியை சிக்கவைத்த யூடியூப் பதிவு!



vikatan.com

டிராபிக் ராமசாமிக்கு எதிராக மதுரை மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள், காவல்துறையிடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், 'பங்காரு அடிகளாரையும், அவரது பக்தர்களையும் டிராபிக் ராமசாமி அவதூறாகப் பேசி யூடியூப்பில் பதிவிட்டுள்ளார். மேலும் ஆதிபராசக்தி கோயிலையும், மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தையும் மூடிவிடுவதாக மிரட்டியுள்ளார் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- செ.சல்மான்

"ஆதார் கார்டும் ஒரு ஆன்லைன் புக்கிங்கும்..!"- இப்படி எல்லாம் நடக்குமோ?

இனி ஆதார் கார்டு இல்லாமல் ஆதார் கார்டு மட்டும் தான் வாங்க முடியும். மற்ற அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் என்கிற ரீதியில் அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. ஆதார் எண் மட்டும் வைத்து தேவையானவற்றை அந்த நபரே இல்லாமல் செய்துகொள்ள விரைவில் வசதிகள் வந்துவிடும். ஏற்கெனவே மனிதர்கள் செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ரோபோக்களும், பாட்களும் வரத்துவங்கிவிட்டன. இப்படியே போனால், எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கலாம் என ஒரு சின்ன கற்பனை.


ஆதார் மீம்ஸ் ஆல்பம் பார்க்க...

கஸ்டமர்: ஹாய்

பாட் (bot): ஹாய்...

கஸ்டமர்: ஆர்டர் எடுத்துக்கோங்க

பாட் (bot): : உங்க ஆதார் நம்பர் சொல்லுங்க

கஸ்டமர்: 4536723522272-252356

பாட் (bot): நன்றி சார். நீங்க ராஜேந்திரந்தான?

கஸ்டமர்: ஆமா..

பாட் (bot): 13, ராஜாஜி நகர், மடிப்பாக்கம். கரெக்ட்டா சார்?

கஸ்டமர்: ஆமா.கரெக்ட்.

பாட் (bot): சொல்லுங்க சார். என்ன வேணும்?

கஸ்டமர்: நான் first time call பண்றேன். உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?

பாட் (bot): ஆதார் நம்பர் மூலமா தெரிஞ்சிக்கிட்டோம் சார்

கஸ்டமர்: ஓக்கே. எனக்கு ரெண்டு மசால் தோசை. ஒரு வெஜ்.பிரியாணி

பாட் (bot): உங்களுக்கு கொலாஸ்ட்ரல் அதிகமா இருக்கு சார். அதனால மசால் தோசை அவாய்ட் பண்ணுங்க

கஸ்டமர்: அது எப்படி உங்களுக்குத் தெரியும்?

பாட் (bot): போன வாரம் ஜி.ஹெச்ல மாஸ்டர் ஹெல்த் செக்கப் எடுத்திருக்கிங்க சார். அந்த ரிப்போர்ட் பாத்தேன்

கஸ்டமர்: This is too much. இதையெல்லாம் பாக்க முடியும்?

பாட் (bot): ரெண்டு சாதா தோசை. ஒரு பிரியாணி? உங்க வீட்டுல மொத்தம் 4 பேரு. போதுமா சார்?

கஸ்டமர்: என் பொண்டாட்டி ஓடிட்டா. இப்ப 3 பேருதான். கொடுய்யா

பாட் (bot): சாரி சார். அவங்க 10 நிமிஷம்முன்னாடிதான் ஒரு கால் டாக்ஸி புக் பண்ணிருக்காங்க. அதனால கேட்டேன். நீங்க ஏற்கெனவே இப்படி ஒரு தடவ அசிங்கமா பேசி ஃபைன் கட்டி இருக்கீங்க சார்

கஸ்டமர்: அதுக்கு?

பாட் (bot): இன்னொரு தடவ பண்ணா ஃபைன் அதிகமாகி ஒரு மாசம் உள்ள இருக்கணும்

கஸ்டமர் சரி.எவ்ளோ ஆச்சுன்னு சொல்லு

பாட் (bot): ஆர்டர் கன்ஃபார்ம்டு சார். மொத்தம் INR 1900.

கஸ்டமர்: கார்ட்ல pay பண்ணலாமா?

பாட் (bot): யெஸ் சார். ஆனா உங்க கிரெடிட் கார்ட்ல லிமிட் இல்லை சார். மேக்ஸிமம் 320 ரூ தான் யூஸ் பண்ன முடியும்

கஸ்டமர்: நான் கேஷே கொடுக்கிறேன். எவ்ளோ நேரமாகும்?

பாட் (bot): பீக் ஹவர்ஸ் சார். டெலிவரி 30 மினிட்ஸ்.

கஸ்டமர்: அய்யோ எனக்கு சீக்கிரம் வேணுமே. நான் வந்து வாங்கிக்கிறேன். Packபண்ணி வைங்க

பாட் (bot): ஓகே சார். ஆனா உங்க பைக் TN 32 BH 1382 இன்ஷூரன்ஸ் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகுது. அத எடுத்துட்டு வந்துடாதீங்க

கஸ்டமர்: இது கூட தெரியுமா?.சரி நீங்களே எடுத்துட்டு வாங்க

பாட் (bot): சார். உங்க wife பீட்ஸா ஆர்டர் பண்ன டிரை பண்றாங்க. நாங்க 15 மினிட்ஸ் டெலிவரி பண்ணிடறோம்னு சொல்லுங்க

கஸ்டமர்: வைய்யா ஃபோன..அவ என்ன பண்ணுவன்னு எனக்கு கூட தெரியல. எல்லாத்தையும் சொல்லுது ..

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...