Friday, March 10, 2017


"ஆதார் கார்டும் ஒரு ஆன்லைன் புக்கிங்கும்..!"- இப்படி எல்லாம் நடக்குமோ?

இனி ஆதார் கார்டு இல்லாமல் ஆதார் கார்டு மட்டும் தான் வாங்க முடியும். மற்ற அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் என்கிற ரீதியில் அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. ஆதார் எண் மட்டும் வைத்து தேவையானவற்றை அந்த நபரே இல்லாமல் செய்துகொள்ள விரைவில் வசதிகள் வந்துவிடும். ஏற்கெனவே மனிதர்கள் செய்ய வேண்டிய விஷயங்களுக்கு ரோபோக்களும், பாட்களும் வரத்துவங்கிவிட்டன. இப்படியே போனால், எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கலாம் என ஒரு சின்ன கற்பனை.


ஆதார் மீம்ஸ் ஆல்பம் பார்க்க...

கஸ்டமர்: ஹாய்

பாட் (bot): ஹாய்...

கஸ்டமர்: ஆர்டர் எடுத்துக்கோங்க

பாட் (bot): : உங்க ஆதார் நம்பர் சொல்லுங்க

கஸ்டமர்: 4536723522272-252356

பாட் (bot): நன்றி சார். நீங்க ராஜேந்திரந்தான?

கஸ்டமர்: ஆமா..

பாட் (bot): 13, ராஜாஜி நகர், மடிப்பாக்கம். கரெக்ட்டா சார்?

கஸ்டமர்: ஆமா.கரெக்ட்.

பாட் (bot): சொல்லுங்க சார். என்ன வேணும்?

கஸ்டமர்: நான் first time call பண்றேன். உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?

பாட் (bot): ஆதார் நம்பர் மூலமா தெரிஞ்சிக்கிட்டோம் சார்

கஸ்டமர்: ஓக்கே. எனக்கு ரெண்டு மசால் தோசை. ஒரு வெஜ்.பிரியாணி

பாட் (bot): உங்களுக்கு கொலாஸ்ட்ரல் அதிகமா இருக்கு சார். அதனால மசால் தோசை அவாய்ட் பண்ணுங்க

கஸ்டமர்: அது எப்படி உங்களுக்குத் தெரியும்?

பாட் (bot): போன வாரம் ஜி.ஹெச்ல மாஸ்டர் ஹெல்த் செக்கப் எடுத்திருக்கிங்க சார். அந்த ரிப்போர்ட் பாத்தேன்

கஸ்டமர்: This is too much. இதையெல்லாம் பாக்க முடியும்?

பாட் (bot): ரெண்டு சாதா தோசை. ஒரு பிரியாணி? உங்க வீட்டுல மொத்தம் 4 பேரு. போதுமா சார்?

கஸ்டமர்: என் பொண்டாட்டி ஓடிட்டா. இப்ப 3 பேருதான். கொடுய்யா

பாட் (bot): சாரி சார். அவங்க 10 நிமிஷம்முன்னாடிதான் ஒரு கால் டாக்ஸி புக் பண்ணிருக்காங்க. அதனால கேட்டேன். நீங்க ஏற்கெனவே இப்படி ஒரு தடவ அசிங்கமா பேசி ஃபைன் கட்டி இருக்கீங்க சார்

கஸ்டமர்: அதுக்கு?

பாட் (bot): இன்னொரு தடவ பண்ணா ஃபைன் அதிகமாகி ஒரு மாசம் உள்ள இருக்கணும்

கஸ்டமர் சரி.எவ்ளோ ஆச்சுன்னு சொல்லு

பாட் (bot): ஆர்டர் கன்ஃபார்ம்டு சார். மொத்தம் INR 1900.

கஸ்டமர்: கார்ட்ல pay பண்ணலாமா?

பாட் (bot): யெஸ் சார். ஆனா உங்க கிரெடிட் கார்ட்ல லிமிட் இல்லை சார். மேக்ஸிமம் 320 ரூ தான் யூஸ் பண்ன முடியும்

கஸ்டமர்: நான் கேஷே கொடுக்கிறேன். எவ்ளோ நேரமாகும்?

பாட் (bot): பீக் ஹவர்ஸ் சார். டெலிவரி 30 மினிட்ஸ்.

கஸ்டமர்: அய்யோ எனக்கு சீக்கிரம் வேணுமே. நான் வந்து வாங்கிக்கிறேன். Packபண்ணி வைங்க

பாட் (bot): ஓகே சார். ஆனா உங்க பைக் TN 32 BH 1382 இன்ஷூரன்ஸ் முடிஞ்சு ரெண்டு நாள் ஆகுது. அத எடுத்துட்டு வந்துடாதீங்க

கஸ்டமர்: இது கூட தெரியுமா?.சரி நீங்களே எடுத்துட்டு வாங்க

பாட் (bot): சார். உங்க wife பீட்ஸா ஆர்டர் பண்ன டிரை பண்றாங்க. நாங்க 15 மினிட்ஸ் டெலிவரி பண்ணிடறோம்னு சொல்லுங்க

கஸ்டமர்: வைய்யா ஃபோன..அவ என்ன பண்ணுவன்னு எனக்கு கூட தெரியல. எல்லாத்தையும் சொல்லுது ..

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024