கட்டாயம்!
மொபைல் போன் 'சிம் கார்டு' பெற ஆதார் எண்...
பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு அதிரடி
spaceplay / pause
qunload | stop
ffullscreen
shift + ←→slower / faster
qunload | stop
ffullscreen
shift + ←→slower / faster
↑↓volume
mmute
mmute
←→seek
. seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
. seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
புதுடில்லி:மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வரும் அனைவரை பற்றிய
தகவல்களையும், ஆதார் எண் அடிப்படையில் சரிபார்க்கும்படி, தொலைத் தொடர்பு
சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள் ளது. இதனால், மொபைல்
போன் சிம் கார்டு வாங்குவதற்கு, இனி, ஆதார் எண் கட்டாய மாகிறது. மேலும்,
ஏற்கனவே, சிம் கார்டு வாங்கியவர்களிடமும், ஆதார் எண் பெறும் நடவடிக்கையும்
துவங்க உள்ளது.
நாடு முழுவதும், நுாறு கோடி பேருக்கும் அதிகமானோர், மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும், அடையாள அட்டை, இருப்பிட சான்று அளித்து, சிம் கார்டு பெற்று, மொபைல் போன் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, மத்திய தொலைத் தொடர்புத் துறை சமீபத்தில் கடிதம் அனுப்பி யுள்ளது.
அதில், 'அனைத்து, பிரி பெய்டு, போஸ்ட் பெய்டு, மொபைல் போன் சந்தாதாரர் களின் அடையாளம் மற்றும் இருப்பிடம் தொடர்பான தகவல்களை, ஆதார் அட்டை அடிப்படையில் மீண்டும் சரிபார்க்க வேண்டும்' எனக் கூறப்பட்டு

உள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரங் கள்
அளித்தும், எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், ஆதார் அட்டை மூலம், தகவல்கள்
மீண்டும் சரிபார்க்கப்பட உள்ளது தொடர்பாக, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு,
தொலைபேசி சேவை நிறுவனங்கள் தெரியப்படுத்த வேண்டுமென, அந்த கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் இணையதளங்களிலும், இது குறித்த தகவல் கள் இடம்பெற வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, சி.ஓ.ஏ.ஐ., எனப்படும், மொபைல் போன் சேவை நிறுவனங்கள் சங்க இயக்குனர் ராஜன் மேத்யூஸ் கூறியதாவது:
ஆதார் அட்டை அடிப்படையில்சந்தாதாரர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்ற நடவடிக்கையை, எங்கள் சங்கம் வரவேற்கிறது.
அதேசமயம், இந்த நடவடிக்கையை அமல்படுத்த, 1,000 கோடி ரூபாய் செலவாகும். அதை, மொபைல் சேவை நிறுவனங்கள் ஏற்க வேண்டும் என்பதை, கருத்தில் கொள்ள வேண்டும். ஆதார் அடிப்படை யில் தகவல்களை மீண்டும் சரிபார்ப்ப தால், போலி சந்தாதாரர்கள் நீக்கப்படுவர்.
சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள, ஒரு ஆண்டு அவகாசத் திற்குள், நாடு முழுவதும், ஆதார் அடிப்படையில் சந்தாதாரர்களின் தகவல்கள் சரிபார்க்கும் பணி களை முடித்து விடுவோம். அதற்குள் முடியாத பட்சத்தில், தொலைபேசித் துறையிடம் கூடுதல் அவகாசம் கேட்போம். இவ்வாறு அவர் கூறினார்.
பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தோர், போலி யான ஆவணங்களை கொடுத்து, சிம் கார்டு வாங்கி, தொலைத் தொடர்பு சேவையை பெறுகின் றனர். பின், அந்த போன் மூலம், சட்டவிரோத நடவடிக்கை களுக்கு, தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். இதுபோன்ற மோசடிகளை தவிர்க்கவே, பாதுகாப்பு காரணம் கருதி, ஆதார் எண், கட்டாயமாக்கப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஓட்டுனர் உரிமத்துக்கும்இனி ஆதார் வேண்டும்
கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுவதற்கு, ஓட்டுனர் உரிமம் பெறப்பட வேண்டும். ஒரு வரே, முறைகேடாக, பல ஓட்டுனர் உரிமங் களை பெறுவதும் நடக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால், ஒரு ஓட்டுனர் உரிமம் முடக்கப் பட்டால்,மற்றொரு உரிம அட்டையை பயன் படுத்தி, அந்த நபர், தொடர்ந்து வாகனங்களை ஓட்டுவதற்காக,இதுபோன்ற சட்ட மீறல்கள் நிகழ்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுனர் உரிமங்களால், போலி அடையாளங்கள் உருவாக்கப்படும் பிரச்னையும் எழுகிறது.
இத்தகைய முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ஓட்டுனர் உரிமம் பெற, ஆதார் அடையாள அட்டையை கட்டாயம் ஆக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஒரே பெயரில் பல ஓட்டுனர் உரிமங்கள் பெறப்படு வதை தடுக்கும்படி, அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமங்களுக்கு, ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் திட்டம், அக்டோபர் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள, பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில், ஓட்டுனர் உரிமங்கள் பெற்றவர்கள் தொடர்பான அனைத்து தகவல் களும், என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவல் மைய இணைய தளத்தில் பதிவேற்றப் பட்டுள்ளன. ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் ஒருவர், ஏற்கனவே, உரிமம் பெற்றுள்ளாரா என்பதை, என்.ஐ.சி., இணைய தளம் மூலம், பிராந்திய போக்குவரத்து அலுவலர் தெரிந்து கொள்ள முடியும்.
No comments:
Post a Comment