கொச்சி: குவைத் மருத்துவமனைகளில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 300 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவரை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் நெருங்கிய நண்பரும், அவரது ஊரான புதுப்பள்ளியை சேர்ந்தவருமான, உதுப் எம்.வர்கீஸ், கொச்சியில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தரும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்த நிறுவனம் மூலம், குவைத்தில் உள்ள மருத்துவமனைகளில் நர்ஸ் பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, ஒவ்வொருவரிடமும், பல லட்சம் ரூபாய் வீதம், 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளார். பணம் கொடுத்தவர்களில் சிலர் குவைத் சென்றபோது, நர்ஸ் வேலைக்கு பதில், வேறு வேலையில் நியமிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றிய உதுப் மீது, பாதிக்கப்பட்டவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியின் நண்பரான உதுப்பை போலீசார் கைது செய்யவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், உதுப்பை சரணடையும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, வெளிநாட்டில் இருந்து, விமானத்தில், நெடும்பாசேரி விமான நிலையத்துக்கு, நேற்று அவர் வந்தார். அவரை அடையாளம் கண்ட, போலீசார், உடனடியாக கைது
செய்தனர்.
No comments:
Post a Comment