Monday, March 27, 2017

மே 14 முதல் சிங்கப்பூர், மலேசியாவுக்கு சுற்றுலா

By பெங்களூரு,  |   Published on : 23rd March 2017 09:22 AM  | 
இந்திய ரயில்வே உணவுப் பரிமாறல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் மே 14-ஆம் தேதி முதல் சிங்கப்பூர், மலேசியாவுக்கு கோடை சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் இந்திய ரயில்வே உணவுப் பரிமாறல் மற்றும் சுற்றுலாக் கழகம்(ஐஆர்சிடிசி) வெளிட்ட செய்திக் குறிப்பு:
ரயில்சார் சுற்றுலாப் பயணங்களை தொழில் முறையில் பிரபலப்படுத்த திட்டமிட்டு, அதன் சேவைகளை மேம்படுத்த இந்திய ரயில்வே உணவுப் பரிமாறல் மற்றும் சுற்றுலாக் கழகம் தொடர்ந்து முற்பட்டு வருகிறது.
இதற்காக பாரத தரிசனம் சுற்றுலா, ரயில் சுற்றுலா, கல்வி சுற்றுலா, நகர சுற்றுலா, கார் வாடகை போன்ற சேவைகளை வழங்கி வருகிறோம். ரயில் சுற்றுலா மட்டுமல்லாது, விமான சுற்றுலாப் பயணத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இந்தத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு 7 பகல்கள், 6 இரவுகள் கொண்ட சுற்றுலாப் பயணத்திற்கு திட்டமிட்டுள்ளது. மே 14 முதல் தொடங்கும் இந்த சுற்றுலாப் பயணித்தில் 25 பயணிகளுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.
இருவழி விமானப் பயணம், மலேசியாவில் 2 இரவுகள், சிங்கப்பூரில் 3 இரவுகள் தங்கும் விடுதி, இந்திய உணவு, பேருந்துபயணம், சுற்றுலாத்தல நுழைவுக்கட்டணம், விசா கட்டணம், ஆங்கிலம் பேசும் சுற்றுலா வழிகாட்டி, பயணக்காப்பீடு ஆகியவற்றுக்கு ஒரு பயணிக்கு ரூ.78,250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர சிம்லா-மணலி-சண்டிகர் நகரங்களுக்கு 7 பகல்கள், 6 இரவுகளுக்கு சுற்றுலாப்பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சிறப்பு சுற்றுலா ரயில், மே 9-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்படுகிறது. இருவழி விமானப்பயணம், தங்கும் விடுதி, காலைசிற்றுண்டி, இரவு உணவு, பேருந்துபயணம், பயணக்காப்பீடு ஆகியவற்றுக்கு ஒரு பயணிக்கு ரூ.27,350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு பெங்களூரு-080-2296001314, மைசூரு-0821-2426001, 09731641611, 09741421486 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...