Monday, March 27, 2017

அதிர வைக்கும் செய்தி: ரூ. 246 கோடியை வங்கியில் செலுத்திய தொழிலதிபர்; ஏன்? எப்போது?



By DIN  |   Published on : 27th March 2017 10:46 AM  |
rupees

திருச்செங்கோடு: உயர் பண மதிப்பு நீக்க காலத்தில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 246 கோடி அளவுக்கு பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியது தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கிராமப்புறத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் அவர் ரூ.246 கோடி அளவுக்கு தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதற்கான சான்றிதழை அவர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சமர்பித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்படி 45 சதவீதம் வரி செலுத்தியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, தன்னிடம் இருந்த பணத்தை மறைக்கவே அவர் முயன்றுள்ளார். அவர் தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வந்ததை நாங்கள் மறைமுகமாக கண்காணித்து வந்தோம். பிறகு, 45% வரி செலுத்திட அவர் ஒப்புக் கொண்டார் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி செய்தி ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஒரு சம்பவம் அல்ல, இதுபோல ஏராளமானோர் தங்களது கருப்புப் பணத்தை வரிப் பிடித்தத்தோடு வங்கியில் செலுத்த ஒப்புக் கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
 
இந்தத் தகவல் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம் வங்கியில் ரூ. 246 கோடி பணத்தை செலுத்தியது யார்? என்பது குறித்து திருச்செங்கோடு மக்கள் மத்தியில் சல சலப்பும் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...