Thursday, March 30, 2017

மாதச் சம்பளம் பெறும் தனி நபர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யவேண்டும் என்று வருமான வரி இலாகா வற்புறுத்தி வருகிறது. 
 
புதுடெல்லி,
மாதச் சம்பளம் பெறும் தனி நபர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யவேண்டும் என்று வருமான வரி இலாகா வற்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் 2017–18–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான படிவம் எளிமை படுத்தப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி வருமான வரி இலாகா அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
மாதச் சம்பளம் மற்றும் வட்டி வருவாய் ஈட்டும் தனி நபர்கள் எளிய முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விதமாக 2017–18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தில் பல்வேறு பத்திகள் குறைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் வருமான வரி கழிவுகள் பற்றிய சில பத்திகளும் அடங்கும். (வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஐ.டி.ஆர்–1/சகாஜ் படிவத்தில் மொத்தம் 18 பத்திகள் உள்ளன)

இதனால் இந்த படிவங்களை நிரப்புவது எளிதாக இருக்கும். புதிய படிவம் வருகிற 1–ந்தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, ஏப்ரல் மாதமே வருமான வரி கணக்கை மதிப்பிட்டு தாக்கல் செய்யலாம். கடைசி நாள் ஜூலை 31–ந்தேதி ஆகும். இணையதளம் வழியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வருகிற 1–ந்தேதியே தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024