Thursday, March 30, 2017

உலக இட்லி தினத்தை முன்னிட்டு 2,500 ரக இட்லி கண்காட்சி

உலக இட்லி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் மையம் இணைந்து 2,500 ரக இட்லி கண்காட்சியை சென்னை பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடத்தினர். 
 உலக இட்லி தினத்தை முன்னிட்டு 2,500 ரக இட்லி கண்காட்சி
சென்னை,

கண்காட்சியில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோரமா, அன்னை தெரசா, அப்துல்கலாம், சார்லி சாப்ளின், அம்பேத்கர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரின் உருவத்திலான இட்லிகளும், அதுமட்டுமல்லாமல் மல்லிப்பூ, இளநீர், பாதாம், பிசா, புதினா, ராகி, பீட்ரூட், சாக்லேட் என மொத்தம் 2,500 இட்லி ரகங்கள் இதில் இடம்பெற்று இருந்தன. மேலும், நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் விதமாக வாக்குப்பதிவு எந்திரம் போன்ற இட்லியையும் உருவாக்கி இருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மு.இனியவன் நிருபர்களிடம் கூறும்போது, ‘உலக இட்லி தினத்தை முன்னிட்டு உன்னத உணவான இட்லியை பல்வேறு சுவை மற்றும் வடிவங்களில் செய்துகொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சி தொடர்பாக 2 மாதம் முன்பு திட்டமிட்டு 2 நாட்களில் 22 பேர் உழைப்புடன் இதை செய்தோம்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024