Wednesday, March 29, 2017

ஓய்வூதியர்களுக்கான ஆவண சரிபார்ப்பு நேர்காணல் ஏப்.3இல் தொடங்குகிறது

By DIN  |   Published on : 29th March 2017 05:18 PM
 
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாவட்டக் கருவூலங்கள், சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது ஆவணங்களை சரிபார்க்க ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் மு.கருணாகரன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

நேர்காணலுக்கு வரும் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வரும்போது ஓய்வூதியப் புத்தகம், நடைமுறையில் உள்ள சேமிப்புக் கணக்கு எண், வங்கி பற்று வரவு புத்தகம், வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வர வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களாக இருந்தால் இந்த சான்றுகளுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வர வேண்டும்.

நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள், வாழ்வு சான்றுக்கான உரிய படிவத்தில் 5 ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். நேரில் வர இயலாத குடும்ப ஓய்வூதியர்கள் இத்தகைய ஆவணங்களுடன் மறுமணம் புரியா சான்றும் அளிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வசிக்கும் ஓய்வூதியர்கள் வெளிநாட்டில் உள்ள நீதிமன்ற நடுவர், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று தொடர்புடைய ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.  ஓய்வூதியர்கள் இப்போதைய இருப்பிட முகவரி, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களையும் அளிக்க வேண்டும். ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடைபெறும்

இந்த நேர்காணலுக்கு வரத் தவறினாலோ, வாழ்வு சான்றுக்கான படிவம் அனுப்பாமல் இருந்தாலோ ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும். சான்றுகளுக்கான மாதிரிப் படிவத்தை www.tn.gov.inkaruvoolam என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வர இயலாத நிலையில் உள்ளோர் உரிய படிவத்தில் வாழ்வுச் சான்று அளித்திட வேண்டும்.

நிகழாண்டு முதல் கருவூலங்களுக்கு செல்லாமலேயே ஆதார் எண் பதிவு செய்து நேர்காணை ஜீவன் பிரமான் என்ற இணையதளம் மூலம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதார் எண் பதிவு செய்தவர்கள் நேர்காணல் வசதியை அரசு இ சேவை மையங்கள், பொது சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 3ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த நேர்காணலானது அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராகிட வேண்டும் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024