12 வயதிலேயே தந்தையான சிறுவன்
கொச்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த, 12 வயது சிறுவன், ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளான்.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு நடக்கும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், சமீபத்தில், 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து, 'போஸ்கோ' எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், அந்த சிறுமி கர்ப்பமடைவதற்கு காரணம், 12 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அதன்படி, அந்த, 12 வயது சிறுவன் மற்றும் குழந்தையின் ரத்த மாதிரிகள் மூலம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தக் குழந்தைக்கு அந்த சிறுவன் தான் தந்தை என்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர்.'பல்வேறு காரணங்களால், மிகவும் சிறு வயதிலேயே, சிறுவர்களும், சிறுமியரும், வயதுக்கு வருகின்றனர். ஆனால், மிகக் குறைந்த வயதிலேயே ஒரு சிறுவன் தந்தையாகி உள்ளது இப்போதுதான் கேள்விபடுகிறோம்' என, அச்சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையில், இருவரும் இளம் வயதினர் என்பதால், போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment