Friday, March 24, 2017

எச்.1.பி., விசா குறித்து கவலைப்பட வேண்டாம் : சுஷ்மா

புதுடில்லி: எச்.1.பி., விசா குறித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் ராஜ்யசபாவில் பேசிய போது: ‛‛ 1990ம் ஆண்வு எச்.1பி., விசா அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்டிற்கு 65,000 பேருக்கான விசா அனுமதி அளித்திருந்தது. 2000 மாவது ஆண்டில் அது 1,95,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2004ம் ஆண்டில் மீண்டும் 65,000 ஆக குறைக்கப்பட்டது. இப்படி அமெரிக்க இரட்டை மன நிலை எடுத்து வருகிறது. 

மேலும் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு குடிபுகுந்ததாக 271 பேரின் பட்டியலை அளித்துள்ளது. அந்த 271 பேரின் கூடுதல் தகவல்களை கேட்டுள்ளோம், அவர்கள் உண்மையான இந்தியர்கள் தானா என்ற விசாரணைக்கு பின்பு அவர்கள் இந்தியா வருவதற்காக ஆவணங்கள் அனுப்பி வைக்கப்படும், அவர்கள் அமெரிக்கா சிறைக்கு செல்வதை இந்தியா விரும்பவில்லை, 

அமெரிக்காவில் ஐ.டி.,துறை பணியில் இருக்கும் இந்தியர்களின் பணி பாதுகாப்பானதாக இருக்கும். அமெரிக்க அரசில் எச்.1.பி., விசா தடை குறித்த 4 மசோதாக்கள் உள்ளன. இந்த மசோதாக்கள் நிறைவேறாமல் இருக்க இந்தியா சார்பில் எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். எச்.1.பி., விசா குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை '' இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment

212 PG medical seats vacant after Round 2

212 PG medical seats vacant after Round 2 TIMES NEWS NETWORK 29.12.2024 Ahmedabad : Following the second-round allocations for postgraduate ...