ஜெயலலிதா உடல், மெரினாவில் இருந்து அப்புறப்படுத்தப்படுமா? ஆர்.டி.ஐ கேள்விக்கு, தமிழக அரசு பதில்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ஜெயலலிதா உடல் அடக்கம்செய்ததுகுறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
துரைசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, மாநகராட்சியின் பொதுத் தகவல் அதிகாரி பதில் அளித்துள்ளார். அவை பின்வருமாறு...
* ஜெயலலிதா உடலை சென்னை மெரினாவில் அடக்கம்செய்ய யாரிடம், எப்படி அனுமதி பெறப்பட்டது என்று துரைசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு, பொதுத் தகவல் அதிகாரி, ’ஜெயலலிதாவின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம்செய்ய, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி கோரிக்கை விடுத்தார். சென்னை மாநகராட்சி சட்டம், பிரிவு 319(3) அடிப்படையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது’ என்று பதில் அளித்துள்ளார்.
* ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் இருந்து அவரின் உடலை அப்புறப்படுத்தும் திட்டம் ஏதாவது உள்ளதா? என்று துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, மாநகராட்சியின் பொதுத் தகவல் அதிகாரி, ’பொருத்தமற்ற கேள்வி’, என்று சொல்லி, பதிலளிக்க மறுத்துவிட்டார்!
No comments:
Post a Comment