ராமச்சந்திரா மருத்துவ மையத்தில் இதய செயலிழப்பு பதிவேடு துவக்கம்
சென்னை: இதய செயலிழப்பு நோயாளிகளின் தகவல்களை பதிவு செய்து, உரிய சிகிச்சை அளிக்க வசதியாக, இதய செயலிழப்பு பதிவேடு ஒன்றை, போரூர், ராமச்சந்திரா மருத்துவ மையம் துவக்கி உள்ளது.
இந்த பதிவேட்டை, ராமச்சந்திரா பல்கலை வேந்தர், வி.ஆர்.வெங்கடாச்சலம் நேற்று, துவக்கி வைத்தார். இதுகுறித்து, மருத்துவமனையின் இதய நோய் துறைத் தலைவர் மற்றும் இயக்குனரான, எஸ்.தணிகாச்சலம் கூறியதாவது:இதயம் சரியாக சுருங்கி, விரிந்து ரத்தத்தை உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் செலுத்த முடியாத நிலையை, இதய செயலிழப்பு என்கிறோம். மக்கள் சரியான ஆரம்ப பரிசோதனை சிகிச்சையை மேற்கொள்ளாததால், இதய செயலிழப்பு நோய் வெகுவாக பெருகி வருகிறது.
இதன் அறிகுறி தெரிந்து, உடனே சிகிச்சை அளித்தால், இதய பாதிப்பை தடுக்கலாம். ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளும், இந்த பவேட்டில் இடம் பெறுவர். அவர்களின் மருத்துவ தகவல்கள், மின் பதிவு செய்யப்பட்டு, அதன் விபரங்கள் வழங்கப்படும். பிற இடங்களில், இதய செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வருவோரும், இங்கு பதிவுசெய்து, சிகிச்சை தொடரலாம். இந்த தகவல்களின் அடிப்படையில் நோய் தடுப்பு, சிகிச்சைகளுக்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்
.இதில், இதயநோய் துறை தலைவர், டி.ஆர்.முரளிதரன், நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டி.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதய செயலிழப்பு குறித்து கருத்தரங்கம், இன்று நடக்கிறது. இதில், துறை வல்லுனர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாற்றிக்
கொள்கின்றனர்.
No comments:
Post a Comment