Thursday, May 4, 2017

அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறையினர் 'கிடுக்கிப்பிடி'

பதிவு செய்த நாள் 03 மே 2017 22:57

அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். துணை வேந்தர் கீதாலட்சுமியிடமும் விசாரணை
நடந்தது.

தமிழக சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஏப்., 7ல், வருமான வரி சோதனை நடந்தது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் மூலமாக பிரசாரம் செய்ய பேரம் பேசியதாக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரிடமும், அவரது மனைவி ராதிகாவிடமும் விசாரணை நடந்தது. சோதனையில் சிக்கிய, முன்னாள் எம்.பி., ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம், இரண்டு முறை விசாரணை நடந்தது. இந்நிலையில், நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி, ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர். அவரிடம், ஆறு மணி நேரங்களுக்கு மேலாக, விசாரணை நடந்தது.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர், தொடர் விசாரணையில் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை நடத்தினோம். அவர், சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார். அதன் அடிப்படையில், மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

அதேபோல, துணைவேந்தர் கீதாலட்சுமியிடமும், நேற்று பல மணி நேரம் விசாரணை நடந்தது. அமைச்சர், விஜயபாஸ்கரை மீண்டும் விசாரிப்போம். இது ஒரு தொடர் நிகழ்வு. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சேலம் - கரூர் பயணிகள் ரயிலை நிறுத்த முடிவு?

பதிவு செய்த நாள் 03 மே
2017
22:18

கரூர்: சேலத்தில் இருந்து, கரூர் வரை இயக்கப்படும் பயணியர் ரயிலில், பயணியரின் வருகை மிகக் குறைவாக இருப்பதால், அந்த ரயிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் - கரூர் இடையே, 2013 முதல் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு, சேலம் - கரூர் இடையே பயணியர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும், காலை, 6:00 மணி மற்றும் 11:30 மணி, மாலை, 5:30 மணி ஆகிய நேரங்களில், சேலத்தில் இருந்து புறப்பட்டு, கரூர் சென்றடையும். பயணியரிடம் வரவேற்பு இல்லாததால், இந்த ரயில் சேவையை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தென்னகரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சேலம் - கரூர் பயணியர் ரயிலில், பயணியர் வருகை, 13 முதல், 21 சதவீதம் மட்டும் உள்ளது. இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால், வரும் காலத்தில், இந்த ரயில் சேவை நிறுத்தப்படும். இருந்தும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, திருச்சி வரை இந்த பயணியர் ரயிலை நீட்டித்தால் மட்டுமே, தொடர்ந்து இயக்குவதற்கான வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, திருச்சியில் இருந்து கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்பட்ட கிருஷ்ணராஜபுரம் ரயில், சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள், பயணியரிடையே வரவேற்பு இல்லாததால், சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இவ்வாறு கூறினர்.
ஆர்.டி.ஐ., சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு

பதிவு செய்த நாள் 03 மே
2017
21:54

மதுரை: 'தகவலறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்பவர் இறந்துவிட்டால், தகவல் அளிக்காமல் மனு முடித்து வைக்கப்படும்' என்ற புதிய சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த சட்டத் திருத்தம், தகவலறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் என்பது, எதிர்ப்பாளர்களின் வாதம் .இந்நிலையில், இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக, சமூக ஆர்வலர்கள், www.change.org என்ற இணையதளத்தில் புகார் மனு ஒன்றை, சில நாட்களுக்கு முன் துவங்கினர். மத்திய அரசுக்கு அளிக்கப்படவுள்ள இம்மனுவில் இதுவரை, அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட, 1.23 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.
மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமுத்தையா மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்



பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 04, 03:45 AM

சிதம்பரம்,

மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ததை மீண்டும் பெற்றுத்தர வேண்டும், மேலும் அந்த இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்குதல், சுகாதார துறைக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்தல், கிராப்புற மருத்துவ சேவை தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்தல், அரசு டாக்டர்களின் உரிமைகளை பறிக்க கூடாது, கிராமங்களில் அரசு டாக்டர்கள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.ஆர்ப்பாட்டம்

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் அவர்களது சட்டை பையில் கருப்பு பட்டை அணிந்து, நேற்று ஒருமணி நேரம் பணியை புறக்கணித்து, அங்குள்ள நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 8 மணிக்கு முதல் 9 மணி வரைக்கும் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் டாக்டர்கள் பாலாஜி, ஜேம்ஸ், ரஞ்சித், அமுதா, சரவணகுமார் உள்ளிட்ட பல்வேறு டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒருமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்பினார்கள். மேலும் நாளை(வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மாநில செய்திகள்

காதாரத்துறை அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி போராட்டம் தொடரும் என டாக்டர்கள் அறிவிப்பு



சுகாதாரத்துறை அமைச்சருடன் டாக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது.

மே 04, 04:45 AM

சென்னை,

சுகாதாரத்துறை அமைச்சருடன் டாக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. இதனால் போராட்டம் தொடரும் என டாக்டர்கள் அறிவித்தனர்.

டாக்டர்கள் போராட்டம்

அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணியாற்றிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்டுவந்த மருத்துவம், பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஐகோர்ட்டு விதித்த தடையை ரத்துசெய்ய வேண்டும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள் மட்டுமே நடந்தது. மற்ற அனைத்துவிதமான சிகிச்சைகளும் தள்ளிவைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைகளும் நடைபெறவில்லை. இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.

பேச்சுவார்த்தை தோல்வி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் 27-ந்தேதி அரசு டாக்டர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் போராட்டம் தொடர்ந்தது. நேற்று 15-வது நாளாக டாக்டர்களின் போராட்டம் நீடித்தது.

தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தினர், துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை 5.40 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணி வரையிலும் நீடித்தது. இருதரப்பினரும் சுமுகமான முடிவுக்கு வராததால் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்தது.

போராட்டம் தொடரும்

பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநில செயலாளர் டாக்டர் கதிர்வேல் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்பில் ஏற்கனவே அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து 15 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். 50 சதவீத இடஒதுக்கீடு நிரந்தரமாக்கப்படும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.

சிகிச்சை பாதிக்கவில்லை

அவசர சிகிச்சை, முக்கிய சிகிச்சை எதையும் நாங்கள் விட்டுக்கொடுப்பதில்லை. அறுவை சிகிச்சையையும் நிறுத்தவில்லை. மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ சேவைகள் தொடர்ந்து கிடைக்கின்றன. சட்டரீதியான தீர்வு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

மத்திய அரசும் விரைவாக சட்டத்திருத்தம் கொண்டுவந்து எதிர்காலத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்படுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடவுளுக்கு மனு

முன்னதாக நேற்று தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் டாக்டர்கள் கருப்பு பலூன்கள் மூலம் கடவுளுக்கு மனு அனுப்பும் போராட்டத்தை நடத்தினார்கள். திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையிலும் போராட்டம் நடந்தது.
தேசிய செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா மறுஆய்வு மனு



  பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மே 04, 05:15 AM

புதுடெல்லி,

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 66 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனிக்கோர்ட்டில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையுடன் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து அவர்கள் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், அந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி 4 பேரின் தண்டனையையும் முழுவதுமாக தள்ளுபடி செய்தார்.சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

இதை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கீழ்க்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதிசெய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.மறுஆய்வு மனு

இந்நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேரில் ஜெயலலிதா மட்டுமே அரசு பதவி வகித்து வந்தார். அவரை மட்டுமே ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்.

அவருடைய மரணத்தை தொடர்ந்து அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரை தண்டிப்பது முறையானது அல்ல. ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.தீர்ப்பு விவரங்கள்

இது சம்பந்தமாக ஏற்கனவே இதேபோன்ற வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட சில தீர்ப்புகள் குறித்த விவரங்களும் மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, May 3, 2017

 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்' காமெடிக்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தம் இருக்கு...!
ஜெ.வி.பிரவீன்குமார்









ஊத்தப்பம்

வடிவேலு ஒரு படத்துல ஹோட்டல்  சப்ளையர்கிட்ட,  'ஒரு சொம்பு தண்ணியை எடுத்து தோசைக்கல்லுல  ஊத்தி, அதுக்குனு வழக்கமா வச்சிருக்க வெளக்கமாத்தால க்ளீன்பண்ணிட்டு ஒரு கிண்ணம் நிறைய மாவை எடுத்து  ஊத்தி, சின்ன ரவுண்டாவும் இல்லாம பெரிய ரவுண்டாவும் இல்லாம பொதுவா ஒரு ரவுண்டை ஊத்தி, நாலு அஞ்சு வெங்காயத்தையும்  கேரட்டையும் எடுத்து, அப்படியே பொடிபொடிபொடிபொடியா  நறுக்கி பரபரபரபரன்னு தூவிவிட்டு, நெய்யை ரெண்டு பக்கமும் ஊத்தி இட்லிபொடியை மழைச்சாரல் மாதிரி அப்டியே பெய்யவிட்டு, பொத்துனாப்புல... அப்படி ஒரு  புரட்டு, இப்படி ஒரு  புரட்டு புரட்டி, 'கமகம'ன்னு ஒரு ஊத்தப்பத்தை எடுத்துட்டு வாங்கன்னு ஆர்டர் பண்ணுவார். ஆனா அவ்வளவையும் கேட்டுட்டு அதைல்லாம் கொஞ்சம்கூட கண்டுக்காமல் கடைசியில, 'அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்...' னு அசால்ட்டா சொல்லிட்டுப்போயிடுவார் சப்ளையர். ஏன் எதுக்குன்னு தெரியலை. மக்கள் வைக்கிற கோரிக்கைகளையும் அதுக்கு அரசாங்கத்தோட ரியாக்சனையும் பார்க்கும்போது அந்தக்காமெடிதான் ஞாபகத்துக்கு வருது மக்களே....

NEWSTODAY 3.8.2026