அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் வருமான வரித்துறையினர் 'கிடுக்கிப்பிடி'
பதிவு செய்த நாள் 03 மே 2017 22:57
அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். துணை வேந்தர் கீதாலட்சுமியிடமும் விசாரணை
நடந்தது.
தமிழக சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கரின் வீடு மற்றும் நண்பர்களின் வீடுகளில், ஏப்., 7ல், வருமான வரி சோதனை நடந்தது. அதில், ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், அவர் மூலமாக பிரசாரம் செய்ய பேரம் பேசியதாக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரிடமும், அவரது மனைவி ராதிகாவிடமும் விசாரணை நடந்தது. சோதனையில் சிக்கிய, முன்னாள் எம்.பி., ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம், இரண்டு முறை விசாரணை நடந்தது. இந்நிலையில், நேற்று அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி, ரம்யாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், 'கிடுக்கிப்பிடி' விசாரணை நடத்தினர். அவரிடம், ஆறு மணி நேரங்களுக்கு மேலாக, விசாரணை நடந்தது.
இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் வழக்கில் தொடர்புடைய சிலர், தொடர் விசாரணையில் உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை நடத்தினோம். அவர், சில முக்கிய தகவல்களை கூறியுள்ளார். அதன் அடிப்படையில், மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.
அதேபோல, துணைவேந்தர் கீதாலட்சுமியிடமும், நேற்று பல மணி நேரம் விசாரணை நடந்தது. அமைச்சர், விஜயபாஸ்கரை மீண்டும் விசாரிப்போம். இது ஒரு தொடர் நிகழ்வு. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment