வாடகை கார் ஓட்டுநரின் மனிதாபிமானம்: முகநூலில் குவிகிறது பாராட்டு மழை
இரா.வினோத்
கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் காவ்யா ராவ் நேற்று தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
நேற்று முன்தினம் இரவு 62 வயதான எனது அப்பாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக என்னால் அலுவல கத்தில் இருந்து வர முடியாததால், அங்கிருந்தவாறே வாடகை கார் புக் செய்தேன். சுமார் 35 வயதுடைய சுனில் என்ற ஓட்டுநர் உடனடியாக வீட்டுக்கு சென்று அப்பாவையும் அம்மாவையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அப்பாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு பள்ளம் மேட்டில் விடாமல் மிக நேர்த்தியாக காரை ஓட்டியுள்ளார். உரிய நேரத்தில் மருத்துவ மனையை அடைந்ததும், “6 கிமீ தூரத்துக்கு ரூ.140 கட்டணம்” என எனது அலைபேசிக்கு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து உடனடியாக அம்மாவை தொடர்புகொண்டு கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து ஓட்டுநருக்கு ரூ.150 தருமாறு கூறினேன்.
எனது அம்மா ரூ.150 கொடுத்த போது, அதை ஓட்டுநர் சுனில் ஏற்க மறுத்துவிட்டார். மேலும், “மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் சவாரிக்கு வாடகை வாங்குவதில்லை. நோயாளி களுக்கு உதவுவது நம்முடைய கடமை” எனக் கூறியுள்ளார். எனது அப்பாவும் அம்மாவும் பல முறை வற்புறுத்திய போதும் அவர் கட்டணத்தை வாங்கவில்லை. குறைந்தபட்சம் பெட்ரோலுக் கான தொகையையாவது வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளனர். அதையும் அவர் ஏற்க வில்லை.
இந்த சம்பவத்தை கேட்டதும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பார்ப்பதற்கு ஏழை போல இருந்த ஓட்டுநரின் மனிதா பிமானமும் பெருந்தன்மையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இத்தகைய நல்ல மனிதர்களால் தான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
காவ்யா ராவின் இந்த முகநூல் பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத் துள்ளது. இதைப் பதிவிட்ட 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரி வித்துள்ள நிலையில், 20 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பகிர்ந் துள்ளனர்.
No comments:
Post a Comment