திணறல்!மாணவர்கள் விண்ணப்பத்தால் 'இ - சேவை' மையங்கள் திணறல்
'இ - சேவை' மையங்களில், அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பிப்பதால், 10 நாட்களுக்கும் மேலாக, அங்கு பணிகள் முடங்கி உள்ளன.
தமிழகத்தில், 9,000க்கும் மேற்பட்ட இடங்களில், இ - சேவை மையங்களை, அரசு நடத்தி வருகிறது. இதில், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்று உட்பட, 100க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. இம்மையங்கள், 10 நாட்களுக்கும் மேலாக முடங்கி உள்ளன.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின், மாணவர்களும், பெற்றோரும், சான்றிதழ்கள் பெற குவிவதால், இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நமது நாளிதழில், கடந்த வாரம் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து, இப்பிரச்னையை தீர்க்க,
சில உத்திகளை, அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இ - சேவைமையங்களில், தினமும், 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வரும். தேர்வு முடிவுகள் வெளி யான பின், தினமும், 65 ஆயிரம் மனுக்கள் வருகின் றன. இதனால், சர்வர் பழுதாகிறது.
எனவே, சில புதிய நடை முறைகளை புகுத்தியுள் ளோம். வழக்கமாக, மைய ஊழியர்கள், சம்பந்தப் பட்ட துறைகளுக்கு மனுக்களை, காலை, 8:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை அனுப்புவர். இனி, 24 மணி நேரமும், அப்பணியை மேற்கொள்ளும்படி கூறியுள்ளோம்.
மேலும்,வருவாய், ஜாதி, இருப்பிட சான்று உள்ளிட்ட, ஐந்து சான்றிதழ்கள், இதுவரை, என்.ஐ.சி., என்ற, தேசிய தகவல்மைய சர்வர் வழியாக மட்டும் கையாளப்பட்டன.
அதை, தற்போது மின்சாரம், குடி நீர் போன்ற கட்டணங்களை செலுத்த பயன் படுத் தும், மாநில அரசின், இ - சேவை சர்வர் மூலமாக வும் கையாள துவங்கியுள்ளோம்.அதனால்,
என்.ஐ.சி., சர்வர் சுமை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேண்டுகோள்!
தமிழகத்தில், 9,000க்கும் மேற்பட்ட, இ - சேவை மையங்கள் உள்ளன. ஆனால், தாலுகா, கலெக் டர் அலுவலகம் உள்ளிட்ட, 1,000 மையங் களுக்கு தான் மாண வர்கள் செல்கின்றனர். கூட்டுறவு சங்கம் போன்றவை, கிராமங்களில் நடத்தி வரும், 6,000க்கும் மேற்பட்ட மையங்களுக்கு, பெரும் பாலானோர் செல்வதில்லை. அந்த மையங் களையும் பயன்படுத்தும்படி, மாணவர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
-நமது சிறப்பு நிருபர் -
No comments:
Post a Comment