Saturday, May 27, 2017

அரசு மருத்துவமனையில் சிகிச்சை: இப்படியும் ஒரு ஐ.ஏ.எஸ்.,

பதிவு செய்த நாள்27மே2017 03:56




பழநி: பழநி சப்கலெக்டர் வினீத், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார். கேரளாவைச் சேர்ந்த வினீத்,42, டாக்டராக பணிபுரிந்தார். பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வானார்.பழநியில் உதவி கலெக்டராக பணியாற்றுகிறார். கொடைக்கானல்
ஆர்.டி.ஓ., விடுமுறையில் சென்றதால், அந்த வருவாய் கோட்டத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் பணிபுரிகிறார். இதனால் அடிக்கடி கொடைக்கானலுக்கும், பழநிக்கும் சென்று வந்ததால், சில நாட்களாக வினீத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் சிரமப்பட்டார். தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற அறிவுறுத்தினர். அவர்களிடம், தன்னை பழநி அரசு மருத்துவமனையில்தான் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.இதனால் வருவாய் துறையினர் நேற்று மதியம் 3 மணிக்கு அவரை பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பழநி சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன், நகர்நல அலுவலர் விஜய்சந்திரன், உதவி கலெக்டருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தனர்.

முன்னுதாரணம்: அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அரசியல்வாதிகள், சாதாரண நடுத்தரவர்க்கத்தினர் கூட அரசு மருத்துவமனையை புறக்கணித்துவிட்டு, தனியார் மருத்துவமனையை நாடுகின்றனர். ஆனால் ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி அரசு மருத்துவமனையை பயன்படுத்தியதால், பொதுமக்களிடம் உள்ள அதைப் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றும், என டாக்டர்கள் தெரிவித்தனர்.

வருவாய்துறையினர் கூறுகையில், 'அவர் சாதாரண தலைவலி, காய்ச்சல் நேரத்தில் கூட எப்போதும் அரசு மருத்துவமனையைத்தான் நாடுவார். சில நாட்களாக கூடுதல் பணியால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சாதாரண காய்ச்சல் தான்' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024