பாலிதீன் பைக்கு ராமேஸ்வரத்தில் தடை : மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்
பதிவு செய்த நாள்27மே2017 01:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஜூன் 30க்கு பின் பாலிதீன் பை, கப் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஓட்டல் நடத்துவோர், கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகளிடம் பாலிதீன் பை, கப்களை விற்கக் கூடாது என, அவற்றை தயாரிப்போருக்கு வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்படும்.
ஜூன் 30ம் தேதிக்கு பிறகு பாலிதீன் பொருள்களை விற்றால், ரூ. ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா தெரிவித்தார்.

No comments:
Post a Comment