Wednesday, May 31, 2017

மானாமதுரை மண்பாண்ட தொழிற்கூடத்தில்பாதிப்பு:5 நாட்களாக மின்தடையால் வருமானம் இழப்பு

பதிவு செய்த நாள்31மே2017 02:25

மானாமதுரை;மானாமதுரையில் கடந்த 5 நாட்களாக மின் சப்ளை இல்லாததால் மண்பாண்ட தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.மானாமதுரை குலாளர் தெருவில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்வது. மண்கூஜாக்கள்,தொட்டிகள்,கார்த்திகை விளக்குகள், சிலைகள்,தயிர் கிண்ணங்கள்,குடுவைகள்,மற்றும் ஏராளமான பொருட்கள் சீசனிற்கு தகுந்தவாறு உற்பத்தி செய்து உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

கர்நாடக சங்கீத கச்சேரிகளில் பயன்படுத்தும் 'கடம்'இங்கு தான் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களை தயாரிக்க குலாலர் தெருவில் ஆங்காங்கே ஏராளமான தொழிற்கூடங்கள் உள்ளன.இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தொழிற்கூடத்தின் ஒரு பகுதியில் உள்ள மின்இணைப்பில் 'மீட்டர் பாக்ஸ்' புகைந்து செயல்படாததையடுத்து அங்கிருந்த 6 மண்பாண்ட பொருட்கள் தயார் செய்யும் கூடங்களுக்கு மின்சப்ளை பாதிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் மண்பாண்ட பொருட்கள் செய்ய பயன்படுத்தப்படும் இயந்திரங்களை இயக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். கடந்த வியாழக்கிழமையிலிருந்து நேற்று காலை வரை மின்சப்ளை இல்லாததால் 50 க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் 

மண்பாண்ட தொழிலாளி ரங்கசாமி32,கூறுகையில்,கடந்த வியாழக்கிழமை மீட்டரில் புகை ஏற்பட்டு மின்சப்ளை பாதிக்கப்பட்டது.நேற்று வரை கரண்ட் வரவில்லை,கரண்ட் கட்டான நாளில் சிப்காட்டில் உள்ள மின்சார அலுவலகத்திற்கு சென்று புதிய மீட்டர் பொருத்த கட்டணங்களையும் கட்டி விட்டோம். இன்னும் வந்து ஊழியர்கள் சரிசெய்யவில்லை எனறு கூறினார்.
எனது கூடத்தில் 6 க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.அதேபோன்று அடுத்தடுத்துள்ள 5 கூடங்களிலும் ஏராளமானவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்,அவர்களும் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர் என்றார்.ஆகவே மின்சார வாரியத்தினர் மண்பாண்ட தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...