Saturday, May 27, 2017

விதிமீறல் கல்லூரி கட்டடங்கள் : அதிரடிக்கு தயாராகுது அரசு
பதிவு செய்த நாள்26மே2017 23:41

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தனியார் கல்வி நிறுவன வளாகங்களில், அதிக கட்டடங்கள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. 2007 ஜூலைக்கு பின் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது, நகர், ஊரமைப்புத் துறை நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தனியார் கல்லுாரிகளின் அனுமதி மற்றும் அங்கீகாரம் புதுப்பித்தலின் போது, அந்த வளாகங்களில் உள்ள கட்டடங்கள் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, நகரமைப்புத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டுமான திட்ட அனுமதிக்கு வரும் கல்லுாரி களின் கட்டடங்களில் விதிமீறல்கள் இருந்தால், நோட்டீஸ் கொடுத்து, 'சீல்' வைக்கலாம்; இடிக்கலாம். உள்ளூர் திட்ட குழுமங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில், 1973 பொது கட்டடங்களுக்கான விதிகள், 1997 தமிழ்நாடு பஞ்சாயத்து கட்டட விதிகள் ஆகியவற்றின்படி, நடவடிக்கை எடுக்கலாம். விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன; விரைவில், அதிரடி நடவடிக்கை துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...