7வது ஊதியக்குழு பரிந்துரை கருத்துக்கேட்பு கூட்டம்! 4 நாட்கள் நடக்கிறது!!
7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை லேடிவெலிங்டன் கல்லூரி வளாகத்தில் 4 நாட்கள் நடைபெற இருக்கிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை கடந்த ஆண்டு அமல்படுத்தியது. அந்த 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசும் செயல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதுகுறித்து கடந்த பிப்ரவரி 22ந்தேதி தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்த்திருத்தத்துறை செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலாளராக டாக்டர் P. உமாநாத் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவினர் மத்திய அரசின் 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் 4 நாட்களாக கருத்து கேட்பு முகாம் நடைபெற உள்ளது.
நாளை தொடங்கி, சனிக்கிழமை (27ந்தேதி), மற்றும் 02.06.2017 (திங்கட்கிழமை), 03.06.2017 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிதியமைச்சர் ஜெயக்குமார், மற்றும் ஊதியக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment