Saturday, May 27, 2017

அரசியலுக்கு வராதீங்க!ரஜினிக்கு கமல் 'அட்வைஸ்'

''தற்போதைய அரசியல் நிலவரத்தில், அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது,'' என, ரஜினிக்கு, நடிகர் கமல் யோசனை தெரிவித்துள்ளார்.





கமல் கூறியதாவது:

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சு எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரத்தில், யாரும் அரசியலுக்கு வராமல்

இருப்பதே நல்லது. இதில், ஏன் ரஜினி உள்ளிட்ட நடிகர்களை மட்டும், தனியாக ஒதுக்க வேண்டும். பகுத்து அறிபவர்கள், யாருமே அரசியலுக்கு வர வேண்டாம்.

இந்தியனாக இருக்க, நாட்டையும், சட்டத்தையும் மதிக்க வேண்டும்.முக்கியமாக,வரி கட்டவேண்டும். அதை, நான் செய்து கொண்டு இருக்கிறேன்.

நான், 21 வயதில், என் விரலில் மை வைத்த போதே, அரசியலுக்கு வந்துவிட்டேன். யார் வர வேண்டும் என்பதை, தீர்மானிக்கும் அரசியலில் இருக்கிறேன். தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும், தமிழ கத்தில்ஆட்சிக்கு வரலாம்.

அரசியலை, சேவை யாக பார்க்க வேண்டும். தியாகம் செய்வதாக நினைத்து, சிலர் சம்பாதிக்கும் தொழிலாக அரசியலை பார்க்கின்றனர். தயவு செய்து,அவர்களுக்கு சம்பளத்தை கொடுத்து

விடுங்கள். அப்போது தான், வேறு மாதிரி யோசிக்கமாட்டார்கள். அனைவரும் கூறுவதை போலவே, 'தமிழகத்தில் அரசியல், 'சிஸ்டம்' கெட்டுப் போய்விட்டது' என, ரஜினி யும் கூறி உள்ளார். அவரின் கருத்தில் தவறு இல்லை. இவ்வாறு கமல் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...