இந்தியாவிலேயே நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
MUTHUKRISHNAN S
அசாம் மாநிலம் கவுகாத்தியிலுள்ள சாதியா என்ற இடத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரிலுள்ள தோலா இடையே பிரம்மபுத்திரா, லோஹித் ஆறுகளில் குறுக்கே சுமார் 9.2 கி.மீ தொலைவில் கட்டப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்தப் பாலம் இந்தியாவிலேயே மிக நீண்ட பாலம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாலம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் அசாம், அருணாச்சல மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து நேரம் 4 மணி நேரமாகக் குறையும். இந்தப் பாலம் இரு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தகப் போக்குவரத்திற்கும் பயனுள்ளதாக அமையும். ராணுவ டாங்குகளையும் தாங்கும் சக்தியுடன் இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைக்கு மிக அருகாமையில் இந்தப் பாலம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு ரீதியாகவும் இந்தப் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

No comments:
Post a Comment