Friday, July 7, 2017

தகவல் அறியும் சட்டத்தில் கவர்னர்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
05:54




புதுடில்லி: 'மாநில கவர்னர்கள் போன்ற, அரசியல் சட்டத்தை செயல்படுத்தும் உயர் பொறுப்பில் உள்ளவர்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏன் கொண்டு வரக்கூடாது' என, சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில கவர்னர்களின் அறிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரி தாக்கலான வழக்கு விசாரணையின் போது, இந்த கேள்வியை, சுப்ரீம்கோர்ட் எழுப்பியது.
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை

பதிவு செய்த நாள்
ஜூலை 06,2017 23:34




ஆமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக, 'கிரையிங் கிளப்' எனப்படும், அழுவதற்கான கிளப், குஜராத் மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உடல்நலத்தை பேணும் வகையில், ஹெல்த் கிளப், புன்னகையாளர் கிளப் என, பல கிளப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில், முதல் முறையாக, ஹெல்த்தி கிரையிங் கிளப்' என்ற கிளப்பை, கமலேஷ் என்பவர் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

'ஹியூமர் மற்றும் லாப்டர்' கிளப்புகள் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில், உறுப்பினர்கள் பங்கேற்று, நகைச்சுவையாக பேசுவதன் மூலமும், வாய்விட்டு சிரிப்பதாலும், அவர்களது மன இறுக்கங்கள் குறைந்து, நோயும் குணமாகிறது. அதேபோல், பிரச்னைகளின் போதும், துக்கத்தை மனதில் அடைத்து வைத்திருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்படும். அதுபோன்ற நேரத்தில், இந்த கிளப்பிற்கு வந்து, மனதில் உள்ள பாரம் நீங்கும் வரை, வாய்விட்டு அழலாம்.
குழந்தை பருவத்தில் அழுகை என்பது, அவர்களின் தேவை அல்லது உடல் உபாதையை குறிப்பிடும். பெரியவர்களான பின், அழுகையை கட்டுப்படுத்துவது, பல நோய்களுக்கு காரணமாகிறது. இதன் காரணமாகவே, இந்த கிளப் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதி லட்டு, தரிசன டிக்கெட் விலை உயரும்?
தேவஸ்தானத்திற்கு ரூ.420 கோடி இழப்பாம்!

திருப்பதி: திருப்பதி தேவஸ்தான வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், 420 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட் விலை உயர வாய்ப்புஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆண்டு பட்ஜெட், 2,500 கோடி ரூபாய்க்கும் மேல். ஒவ்வொரு ஆண்டும் வருவாய் உயர் வுக்கு தக்கபடி, தேவஸ்தானத்தின் பட்ஜெட் தொகையும் உயர்வடையும்.
உண்டியல்

அதனால், தேவஸ்தானத்திற்கு இதுவரை எந்த நிலையிலும் வருவாய் இழப்பு ஏற்பட்டது இல்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு, மத்திய அரசு அறிவித்த பணமதிப்பு இழப்பு திட்டம் அமலான நாள் முதல், தேவஸ்தானத்திற்கு, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், முதல் முறையாக, தேவஸ்தான பட்ஜெட் பற்றாக்குறை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

உண்டியல் மூலம் தேவஸ்தானத்திற்கு மாதம், 100 கோடி ரூபாய் வசூலாகி வந்தது. தற்போது, 60 முதல், 70 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆறு மாதத்தில், உண்டியல் வருமானம் மூலம், 108 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், இந்தாண்டு உண்டியல் வருமானம், 1,000 கோடி ரூபாயை தாண்டாது என, அதிகாரிகள் கணித்துஉள்ளனர்.

ஏழுமலையானுக்கு, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடியை, தேவஸ்தானம், இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. அதன் மூலம், 2015ல், 200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது; ஆனால் கடந்தாண்டு அது, 150 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

விரைவு தரிசனம்:

தேவஸ்தானம் இணையதள முன்பதிவில், 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட்டை வெளியிட துவங்கியதிலிருந்து மாதந் தோறும், 23 ஆயிரம் பக்தர் கள், அந்த வசதியை பயன்படுத்தி, ஏழுமலை யானை தரிசித்து வந்தனர்.தற்போது, அந்த வசதி மூலம், தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரமாக குறைந்து உள்ளது.

கோடை விடுமுறையின் போது, பரிந்துரை கடிதங் களுக்கு வழங்கும், 'பிரேக்' தரிசனத்தை, தேவஸ் தானம் வார இறுதி நாட்களில் ரத்து செய்ததால், 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

லட்டு

மானிய விலையில் லட்டு விற்பனை செய்வதால், ஆண்டிற்கு, 250 கோடி ரூபாய், தேவஸ்தானம் கூடுதலாக செலவிட்டு வருகிறது. ஒரு லட்டு தயாரிக்க, 35 ரூபாய் செலவாகிறது. ஆனால், 2005 முதல், லட்டு பிரசாதம் விலை, 25 ரூபாயாகவே உள்ளது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, இலவச லட்டு, தர்ம தரிசன பக்தர்களுக்கு, 10 ரூபாய் மானிய விலையில் இரண்டு லட்டு, தேவஸ்தான ஊழியர்களுக்கு தலா, ஐந்து ரூபாய் விலையில் மாதத்திற்கு, 10 லட்டு என, தேவஸ்தானம் அளித்து வருகிறது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஆண்டிற்கு, 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

விலை ஏற்றம்

இவை அனைத்தையும் கணக்கிட்டால், தேவஸ்தானத்திற்கு, 420 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது பண மதிப்பு இழப்புடன், ஜி.எஸ்.டி., வரி விதிப் பும் இணைந்துள்ள தால், இந்தாண்டு தேவஸ் தானத்திற்கு கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது.
அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு கட்ட, லட்டு பிரசாதம் மற்றும் தரிசன டிக்கெட், அறை வாடகை உள்ளிட்ட வற்றின் கட்டணத்தை உயர்த்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள், ஆந்திர அரசிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

வருவாய் இழப்பை சரிக்கட்ட எத்தனையோ வழிகள் இருக்கு!

திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு, தரிசன டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அறிவிப்பிற்கு, அதிருப்தி தெரிவித்துள்ள பக்தர்கள் கூறியதாவது:

திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளன. பல ஆயிரம் கோடிக்கு, நகைகள் இருப்பு உள்ளன. வங்கியில், 'டிபாசிட்' செய்யப்பட்ட தொகைக்கு வட்டி கிடைக்கிறது. எந்த காரணத்தை கருதி யும், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு விலையை ஏற்றக்கூடாது; தரிசன கட்ட ணத்தை யும் உயர்த்தக் கூடாது.

திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக செலுத் தப்பட்ட பழைய, 1,000 - 500 நோட்டுகளை, மத்திய அரசின் சிறப்பு அனுமதி மூலம், புதிய ரூபாயாக மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ஜி.எஸ்.டி., தொடர்பான எந்த வரி யையும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு விதிக் கக் கூடாது. இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால், திருப்பதிக்கு ஏற்படும் வருவாய் இழப்பை நிச்சயம் சரி கட்ட முடியும்.
மேலும், திருப்பதி தேவஸ்தானம், இந்த விவகாரத்தை வருவாய் ஈட்டும் தொழிலாக பார்க்காமல், ஆன்மிக சேவையாகவே கருத வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் பெற இன்று கடைசி நாள்

பதிவு செய்த நாள் 07 ஜூலை
2017
06:19




சென்னை: தமிழகம் முழுவதும் 22 மருத்துவக் கல்லூரிகளில் எம்,பி,பி,எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம் பெற இன்று(ஜூலை 7) கடைசி நாளாகும். ஜூன் 27ம் தேதி துவங்கிய விண்ணப்ப விநியோகத்தில், அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு என தனித்தனியே விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை(ஜூலை 8) கடைசி நாள்.
ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாயாக உயர்வு; தியேட்டர்களில் புதிய கட்டண விவரம்




சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளது.

ஜூலை 07, 2017, 03:19 AM சென்னை,

100 ரூபாய்க்கு குறைவான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிட்டது.

ஆனாலும் உள்ளாட்சி கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் 3-ந்தேதியில் இருந்து தியேட்டர்களை மூடி போராட்டத்தில் குதித்ததாலும் புதிய சினிமா டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட இருந்த கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், இன்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியை மட்டும் சேர்த்து புதிய டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கனவே ரூ.120, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் விலைகள் இருந்தன. இன்று முதல் ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாய் 60 காசு என்றும் ரூ.100 டிக்கெட் கட்டணம் ரூ.128 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் 11 ரூபாய் 80 காசு என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சாதாரண குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.50 டிக்கெட் கட்டணம் ரூ.59 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் ரூ.11.80 என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.

குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.30 டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் 40 காசு என்றும் ரூ.5 டிக்கெட் கட்டணம் 5 ரூபாய் 90 காசு என்றும் மாற்றி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகையில் புதிய முறை





ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையில் புதிய முறையை அறிமுகப்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

ஜூலை 07, 2017, 05:16 AM
புதுடெல்லி,


தற்போது, ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ஆணாக இருந்தால், 40 சதவீத சலுகையும், பெண்ணாக இருந்தால் 50 சதவீத சலுகையும் அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் கட்டண சலுகையால், ரெயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,300 கோடி இழப்பு ஏற்படுகிறது.

புதிய முறை

எனவே, இதை குறைக்க ரெயில்வே துறை புதிய முறையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ‘உங்களுக்கு கட்டணத்தில் பாதி சலுகை வேண்டுமா? அல்லது முழு சலுகை வேண்டுமா?’ என்ற கேள்வி கேட்கப்படும்.

இதற்கு மூத்த குடிமக்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, கட்டண சலுகை அளிக்கப்படும். பாதி சலுகை போதும் என்று கூறினால், அதற்கேற்ப ரெயில்வேயின் இழப்பு குறையும்.

Thursday, July 6, 2017

சபாஷ்.. நரிக்குறவ குழந்தைகள் கல்விக்கு உதவிய போலீசார்!




சென்னை: அம்பத்தூரில் சாலை ஓரங்களில் வாழும் நரிக்குறவர் இன மக்களின் குழந்தைகளை போலீசார் பள்ளி கூடத்தில் சேர்த்துள்ளனர். போலீசாரின் இந்த செயல்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ் அருகே உள்ள பிளாட் பாரத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து அதில் வரும் வருவாயை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் விஜயராகவன் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிளாட்பாரத்தில் தங்கி இருந்த நரிக்குறவர்களின் குழந்தைகள் சாலை ஓரங்களில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

இதைப்பார்த்த காவல் ஆய்வாளர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதது குறித்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் விசாரித்தார். அதற்கு பதிலளித்த அவர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்ததாகவும், ஆனால் போக்குவரத்து மற்றும் துணிகள் என செலவிட பணம் இல்லாததால் இடையிலேயே நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆய்வாளர் விஜயராகவன் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆணையாளரின் உத்தரவின் பேரில் அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பேசி, 7 குழந்தைகளை புதிதாகவும், இடையில் நிறுத்தப்பட்ட 3 குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்துவிட்டனர்.

மேலும் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர போக்குவரத்து வசதியும் காவல்துறை சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த செயல்பாடு மக்களிடையே மதிப்பை உயர்த்தும் என கூறப்படுகிறது.

source: oneindia.com

Dailyhunt

NEWS TODAY 20.08.2026