Friday, July 7, 2017

அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை

பதிவு செய்த நாள்
ஜூலை 06,2017 23:34




ஆமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக, 'கிரையிங் கிளப்' எனப்படும், அழுவதற்கான கிளப், குஜராத் மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உடல்நலத்தை பேணும் வகையில், ஹெல்த் கிளப், புன்னகையாளர் கிளப் என, பல கிளப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில், முதல் முறையாக, ஹெல்த்தி கிரையிங் கிளப்' என்ற கிளப்பை, கமலேஷ் என்பவர் துவங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

'ஹியூமர் மற்றும் லாப்டர்' கிளப்புகள் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களில், உறுப்பினர்கள் பங்கேற்று, நகைச்சுவையாக பேசுவதன் மூலமும், வாய்விட்டு சிரிப்பதாலும், அவர்களது மன இறுக்கங்கள் குறைந்து, நோயும் குணமாகிறது. அதேபோல், பிரச்னைகளின் போதும், துக்கத்தை மனதில் அடைத்து வைத்திருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்படும். அதுபோன்ற நேரத்தில், இந்த கிளப்பிற்கு வந்து, மனதில் உள்ள பாரம் நீங்கும் வரை, வாய்விட்டு அழலாம்.
குழந்தை பருவத்தில் அழுகை என்பது, அவர்களின் தேவை அல்லது உடல் உபாதையை குறிப்பிடும். பெரியவர்களான பின், அழுகையை கட்டுப்படுத்துவது, பல நோய்களுக்கு காரணமாகிறது. இதன் காரணமாகவே, இந்த கிளப் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024