Thursday, July 27, 2017

2 ஆண்டுகளுக்கு 'நீட்' விலக்கு?

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்ட மசோதாவை, மத்திய அரசு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.

இதனால், மருத்துவ படிப்புகளில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதமும், இதர பாடத்திட்ட மாணவர்களுக்கு, 15 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை பிறப் பித்தது.இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. தமிழக அரசின் மேல்முறை யீட்டு மனு, விசாரணையில் உள்ளது. இந்நிலை யில், 'நீட்' தேர்வில் விலக்கு கோரும்

சட்டத்துக்கு ஒப்புதல் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

நிரந்தர விலக்கு அளிக்கும், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு அனுமதி வழங்க மறுத் துள்ளது. எனினும், மாணவர்களின் நலன் கருதி, இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க, மத்திய அரசு முன் வந்துஉள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து,சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது: 'இந்தாண்டு மட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, சட்டத்தில்



வாய்ப்புள்ளதா என, பரிசீலிக்கப் படும்' என, மத்திய அரசு கூறியுள்ளது. இதற் காக, சட்ட நிபுணர்களுடன், தமிழக அதிகாரிகள், ஆலோசித்து வருகின்றனர். அத்துடன், குறைந் தது இரண்டு ஆண்டுகள் விலக்கு பெறும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024