Wednesday, July 26, 2017


ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தம்: விரைவில் புதிய ரூ.200 நோட்டுகள்
By DIN | Published on : 26th July 2017 12:30 PM |




ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை மைசூரு பிரின்டிங் பிரஸ் நிறுத்தி உள்ளது. அதற்கு பதிலாக ரூ.200 நோட்டுக்கள் அச்சிடுவதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி பழைய ரூ,500, ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து அதனை ஈடு செய்யும் வகையில் ரூ.7.4 டிரில்லியன் மதிப்பிலான 3.7 பில்லியன் புதிய ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளன. புதிய ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டதன் மூலம் பொதுமக்கள் பெருமளவில் சில்லறைக்காக அவதிபட்டு வந்தனர்.

இந்நிலையில், ரூ.200 நோட்டுக்கள் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதனை ஈடு செய்யும் வகையில் புதிய ரூ.200 ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவை அடுத்த மாதத்தில் சுழற்சி முறையில் வெளி வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் புள்ளி விபர கணக்கின்படி, ஜூலை 14 வரை ரூ.15.22 டிரில்லியன் அளலான பணம் புழக்கம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது. ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக இதுவரை சுமார் 14 பில்லியன் புதிய ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டுள்ளன.

கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய நிதியாண்டில் ரூ.2000 நோட்டுகளை அச்சிடுவதற்கு வாய்ப்பில்லை என்று மத்திய வங்கி தெரியவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024