Sunday, July 30, 2017

அதிரடி!

வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க வரித்துறை... சமூக வலைதளங்களை பயன்படுத்த திட்டம்

புதுடில்லி, வரி ஏய்ப்பாளர்களை கண்டறிய, வங்கிகளை மட்டும், இனி, வருமான வரித் துறை நம்பியிருக்கப் போவதில்லை. 'இன்ஸ்டா கிராம்' போன்ற சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி, வரி ஏய்ப்பாளர்களை கண்டு பிடிக்க, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.




வருமான வரி வசூலிக்க, பல்வேறு நடவடிக்கை களை, மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவு, வருமான வரி வசூலாவதில்லை என்பது தான் உண்மை. கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வர, பல சலுகை திட்டங்களை, அரசு அறிவித்தது. ஆனால், அதிலும், எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. வரி ஏய்ப்பாளர்களின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்துக் கொண்டே போகிறது.

வங்கிகள் மூலம் தான், பெரும்பாலும் வரி ஏய்ப்பாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இவர்களின் வரவு - செலவு, சேமிப்பு, கடன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தான், வரி ஏய்ப்பாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வங்கிகளை தவிர, சமூக வலை தளங்களை பயன்படுத்தியும், வரி ஏய்ப்பாளர் களை கண்டறிய, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.

இது பற்றி, வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: 'இன்ஸ்டா கிராம், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங் களை, பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சமூக வலைதளங்களில், தங்கள், குடும் பத்தின் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். தாங்கள் வாங்கிய விலையுயர்ந்த காரின் முன், புகைப்படம் எடுத்துக் கொண்டு, அதை சமூக வலைதளங்களில் வெளி யிடுகின்றனர்.புதிதாக வாங்கிய சொத்துகளின் படங்களையும் வெளியிடுகின்றனர்.

இதனால், இந்த சமூக வலைதளங்களை கண் காணிக்க முடிவு செய்துள்ளோம். இதில், கணக்கில் காட்டாத சொத்துகளுக்கான படங்களை வெளி யிட்டிருந்தால், அதை கணக்கில் எடுத்துக் கொண்டு விசாரிப்போம். இதில், மூன்றாவது நபர் தலையீடு இருக்க முடியாது.இதற்காக 'பிராஜக்ட் இன்சைட்' என்ற பெயரில், ஆவண காப்பகம் ஒன்று விரைவில் துவங்கப்பட உள்ளது.

இதில், வருமான வரி செலுத்துவோரின் விபரங்கள், அவர்களின் விரல் ரேகை உட்பட, அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.சமூக வலைதளங்களை கண் காணிக்க குழு அமைக்கப்படும். அந்த குழு, சமூக வலைதளங்களில் ஆய்வு செய்து, வருமான வரி தொடர்பான புகைப்படங் களை,பிராஜக்ட் இன்சைட் டுக்கு அனுப்பும்.அதை வைத்து,நாங்கள் விசாரணை நடத்துவோம். இதனால், வரி ஏய்ப்பாளர்களை கண்டறிந்து, வரி வசூலை அதிகரிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

வசூல் அதிகரிக்கும்

வருமான வரி ஆலோசகர் ஒருவர்கூறியதாவது: பெல்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுக ளில், வரி ஏய்ப்பாளர்களை கண்டுபிடிக்க, நவீன தொழிற்நுட்பங்கள் தான் அதிகளவில் பயன்படுத்ப்படுகின்றன.பிரிட்டனில்,2010 முதல்,இந்த முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 3,456 கோடி ரூபாய் வருவாய் இழப்பு தடுக்கப் பட்டுள்ளது. மேலும், வரி ஏய்ப்பாளர்கள் மீதும் நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த முறை அமலுக்கு வரும் போது, வரி வசூல் நிச்சயம் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

திட்டத்துக்கு வரவேற்பு

இது பற்றி சமூக வலைதள ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:சமூக வலைதளங்கள் பெரும் பாலும், ஆபாசத்துக்கு தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன என, ஆதாரமின்றி சிலர் குற்றம் சாட்டுகின்றனர்; இது தவறு. சமூக வலைதளங்கள் மூலம், மக்களுக்கு நல்ல தொடர்பு கிடைக்கிறது.

அதே போல், சமூக வலைதளங்கள் மூலம், வரி ஏய்ப்பாளர்களை கண்டறியும், மத்திய அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. ஏனெனில், சமூக வலைதளங்களில், தங்களை பற்றிய விபரங் களை தெரிவிப்பவர்கள், மிகவும் கவனத்துடன் செயல்பட, இது வழிவகுக்கும். அதே நேரத்தில் ஏரி ஏய்ப்பு செய்வதையும் தடுக்க முடியும்.

மேலும், விசாரணை என்ற பெயரில், யாரை யும், துன்புறுத்தும் நடவடிக்கைக்கும் வாய்ப்பு இருக்காது. அதனால், இந்த நடவடிக்கையை, அரசு, உடனே துவக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024