Thursday, July 27, 2017

ராமேஸ்வரம் - அயோத்தி ரயில் அட்டவணை அறிவிப்பு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
22:45

ராமநாதபுரம்: பிரதமர் மோடி துவக்கி வைக்கும் ராமேஸ்வரம்- - அயோத்தி வாராந்திர விரைவு ரயில் புறப்படும், சென்றடையும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - அயோத்தி ஆகிய புனித தலங்களை இணைக்கும் வகையில், வாராந்திர விரைவு ரயிலை, பிரதமர் மோடி இன்று
துவக்கி வைக்கிறார்.ஞாயிறுதோறும் இந்த ரயில், ராமேஸ்வரத்தில் இருந்து, ஞாயிறுதோறும், இரவு, 11:50 மணிக்கு புறப்படும். மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை, கூடூர், விஜயவாடா, வாராங்கல், பாலர்ஷா, இட்டார்சி, ஜபல்பூர், பாட்னா, அலகாபாத், ஜான்பூர் ஆகிய நிலையங்களில் நின்று, புதன் காலை, 8:00 மணிக்கு அயோத்தி சென்றடையும். அங்கிருந்து, 8:30 மணிக்கு பைசியாபாத் வரை செல்லும்.

ஏமாற்றம் : மறு மார்க்கத்தில், புதன் இரவு, 11:55 மணிக்கு, அயோத்தியில் புறப்பட்டு, சனி காலை, 8:50 மணிக்கு ராமேஸ்வரம் வந்தடையும். இந்த ரயில் வெள்ளி மாலை, 6:50க்கு சென்னைக்கும், சனி காலை, 8:50க்கு ராமேஸ்வரத்திற்கும் வரும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட தலைநகரான ராமநாதபுரம், வர்த்தக நகரமான பரமக்குடியில் இந்த ரயில் நிற்காதது, அந்த பகுதி மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024