Wednesday, July 26, 2017

வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைவதற்காக ராஜிவ் கொலை கைதி முருகன் ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறார்: ஆகஸ்ட் 18 முதல் பழங்களே ஆகாரம்

2017-07-26@ 00:02:48
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜிவ் கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி முருகன் ஜீவ சமாதி அடைய தினம்  ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்வதாகவும், 18ம் தேதி முதல் பழங்களை மட்டும் ஆகாரமாக எடுத்துக்கொள்வதாகவும் கூறியதாக சிறைத்துறை  போலீசார் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர்  மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன், சிறைத்துறை ஏடிஜிபி அலுவலகத்திற்கு அளித்த மனுவில், ‘கடந்த 26 ஆண்டுகளாக சிறை  தண்டனை அனுபவித்து வருகிறேன். இனியும் சிறை வாழ்க்கையை தொடர எனக்கு விருப்பமில்லை.

சிறையிலேயே ஜீவ சமாதியாக விரும்புகிறேன்.  எனவே வரும் 18ம்தேதி முதல் பட்டினி கிடந்து சிறையிலேயே ஜீவ சமாதி அடைய அனுமதிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் கடந்த சில நாட்களாக முருகன் சிறையில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருகிறார். மேலும் வரும் 18ம்தேதி முதல்  ஜீவசமாதி அடைவதற்காக தற்போது சாப்பிட்டு வரும் ஒரு வேளை உணவையும் நிறுத்தி விட்டு வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட உள்ளதாக  சிறைத்துறையினருக்கு மனு அளித்துள்ளதாக சிறை போலீசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024