Sunday, July 30, 2017

கல்லூரி, பல்கலைகளுக்கு தூய்மை தரவரிசை பட்டியல்

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:44

'மத்திய அரசின் துாய்மை வளாக திட்டத்திற்கு, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், வரும், நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்' என, பல்கலைக்கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், ஒவ்வொரு துறையும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், வளாகங்களில், துாய்மையை பேணுவது தொடர்பான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு, பரிசும், சான்றிதழும் தரப்படுகிறது. இந்த வகையில், மத்திய அரசின், 'ஸ்வச்தா' என்ற, துாய்மை வளாக தரவரிசை பட்டியலில் இடம் பெற, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.இதன்படி, நாளைக்குள் விண்ணப்பங்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பித்த கல்வி நிறுவன வளாகங்களின், துாய்மை, சுகாதார திட்டங்கள் மற்றும் வசதிகள், ஆகஸ்டில் ஆய்வு செய்யப்படும். செப்., முதல் வாரம் தரவரிசை வெளியாகும். செப்., 8ல் சிறந்த நிறுவனங்களுக்கு, டில்லியில் விருது வழங்கப்படும்.கல்லுாரி, விடுதிகளில் கழிப்பறை வசதி மற்றும் துாய்மை பராமரிப்பு, கேன்டீன்களில் சுகாதாரமாக உணவு சமைத்து பரிமாறுதல், வளாகத்தை துாய்மையாக வைத்திருத்தல், தரமான குடிநீர் வழங்குதல், திடக்கழிவு மேலாண்மையில் நவீன தொழில்நுட்பம் கையாளுதல், அருகிலுள்ள ஏதாவது கிராமத்தை தத்தெடுத்து, துாய்மையை பராமரித்தல் போன்றவற்றின் அடிப்படையில், இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024