Wednesday, July 26, 2017

'ஆதார்' இல்லாத சிறுமிக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
21:14




புதுடில்லி: டில்லியில், 'ஆதார்' பதிவு இல்லாத சிறுமியை, அரசு பள்ளியில் சேர்க்க மறுத்த சம்பவத்தால், பெற்றோர் அதிர்ச்சி

அடைந்துள்ளனர்.டில்லியில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு வசிப்பவர், அஜீஸ் கான். டிரைவரான இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் மூவரும், தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.

தனியார் பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியாததால், அரசு பள்ளியில் சேர்க்க, அஜீஸ் கான் முடிவு செய்தார். அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில், குழந்தைகளைச் சேர்ப்பதற்காக சென்ற போது, விண்ணப்பத்துடன், குழந்தைகளின் ஆதார் அட்டையும் இணைக்கும்படி கூறியுள்ளனர்.
இதையடுத்து, அங்குள்ள ஆதார் அட்டை பதிவு முகாமிற்கு, தன் குழந்தைகளுடன் அஜீஸ் கான் சென்றார். அங்கு, மூத்த மகள் மற்றும் மகனுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இளைய மகள், தானாஸ், 7, கைவிரல் ரேகைகள் தெளிவாக இல்லாததால், ஆதார் பதிவு செய்ய முடியவில்லை.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது, 'ஆதார் அட்டை இல்லாமல் சேர்க்க முடியாது' என, கண்டிப்புடன் கூறிவிட்டனர். இதனால், அந்த குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024