Sunday, July 30, 2017

எங்கே அமையபோகிறது 'எய்ம்ஸ்'?; மத்திய அரசு - தமிழக அரசு 'சடுகுடு'

பதிவு செய்த நாள்
ஜூலை 30,2017 07:40



மதுரை: 'தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தை தேர்வு செய்ய வேண்டியது மத்திய அரசுதான்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்,தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அறிவிப்பு

தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க உத்தரவிடக் கோரி, மதுரை ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், பல்வேறு இடங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்தும், எங்கு, 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைய உள்ளது என்பது பற்றி, அறிவிப்புவெளியாகவில்லை. இது குறித்த அறிவிப்பை வெளியிட, மத்திய சுகாதாரத்துறை செயலர், எய்ம்ஸ் இயக்குனருக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மத்திய சுகாதாரத்துறை சார்புச் செயலர், வினோத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், 'தகுந்த இடத்தை அடையாளம் கண்டு, மாநில அரசு தான் பரிந்துரைக்கவேண்டும்; அதன்பின் மத்திய சுகாதாரத்துறை ஆய்வு செய்து, அது உகந்த இடம்தானா என்பதை முடிவு செய்யும்' என, தெரிவித்தார்.

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர், ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பதில் மனு:முடிவு செய்யப்படும்ஈரோடு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை தோப்பூரில், மத்திய அரசின் குழு, ஆய்வு செய்தது. இவ்விவகாரத்தில், மத்திய அரசு அவ்வப்போதுகோரும் விபரங்களை, தமிழக அரசு அளித்து வருகிறது.தமிழக அரசு, 2016, பிப்ர வரியில், 'எங்கு எய்ம்ஸ் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து, அதற்கான பணியை விரைவுபடுத்த வேண்டும்' என, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசு, 'விரைவில் முடிவு செய்யப்படும்' என, பதிலளித்தது.மாதிரித் திட்டம் உட்பட, கூடுதல் விபரங்களை, சமீபத்தில், மத்திய அரசுக்கு வழங்கியுள்ளோம். அடிப்படை வசதிகளை செய்துதரத் தயார். எங்கு, 'எய்ம்ஸ்' அமைப்பது என, இடம் தேர்வு செய்வதில், முடிவு எடுக்க வேண்டியது மத்திய அரசுதான்.

இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.வழக்கு, ஆக., 1ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024