Wednesday, July 26, 2017

கல்லூரி மாணவர்களுக்கு இலவச வைஃபை!


ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நிறுவனமானது இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி கல்லூரி  மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்யவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் தனது தொலைத் தொடர்புச் சேவையைத் தொடங்கியது. பல்வேறு இலவசச் சலுகைகளை வழங்கி அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. இலவச டேட்டா, இலவச எஸ்.எம்.எஸ்., இலவச அழைப்பு வசதி போன்றவற்றை வழங்கி வந்த ஜியோ தற்போது இலவச வைஃபை சேவையை வழங்கவிருக்கிறது. இதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரியுள்ளது.

இச்சேவையின்படி, நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கல்லூரி பயிலும் சுமார் 3 கோடி மாணவர்கள் வைஃபை வசதியைப் பெற்றுப் பயன்பெறுவார்கள். ரிலையன்ஸ் ஜியோவின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிற நெட்வொர்க் நிறுவனங்களையும் இத்திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்த மற்றொரு அறிவிப்பில் இலவச மொபைல் போன்கள் வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த 4ஜி போன்களில் ஃபேஸ்புக் பயன்படுத்த முடியும்; ஆனால், வாட்ஸ் ஆப் பயன்படுத்தவியலாது

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024