Sunday, July 30, 2017

DSR (Digital SR) - அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....


DIGITAL SERVICE REGISTER(DSR) MAINTENANCE MANUAL
🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

DSR (Digital SR)

அனைத்து அரசு ஊழியர் ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு....

மாவட்ட கருவூல அலுவலர் அறிவிப்பு பணிப்பதிவேட்டை
DSR டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்
அமல்படுத்தும் முறை பற்றி கூறியவை:


🍇 *அனைத்து SR யும் மாவட்டக் கரூவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்,..பெற்றுக்கொணடதற்கு ஒப்புகைச்சீட்டுத் தரப்படும்....இரண்டு நாட்களில் அவை ஸ்கேன் செய்யப்பட்டு திரும்ப பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை வாங்கிய பின் ஒப்படைக்கப்படும்*

🍇 *SR DISTRICT TREASURY -ல் இருக்கும் போது. அதில் ஏதேனும் திருத்தம் இருப்பதாக போன் மூலம் கூறக்கூடாது..HM நேரில் செல்ல வேண்டும்*

🍇 *மிகப்பழமையான/ கிழிந்து போன/ லேமினேட் செய்யப்பட்ட SR உடைய பணியாளர் ஸ்கேன் செய்யும் போது உடனிருக்க வேண்டும்*

🍇 *ஸ்கேனிங் முடிந்தவுடன் அது பற்றிய 1 பிரிண்ட் அவுட் ஒவ்வொரு பணியாளருக்கும் தனித்தனியாக வழங்கப்படும்.அதில் தவறிருந்தால் அதை நாம் கூறியவுடன் , அத்தவறு சரி செய்யப்பட்டு அதற்குரிய வேறொரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும்*

🍇 *ஸ்கேன் பண்ணிய SRக்கு DIGITAL SR (DSR) என்று பெயர்*

🍇 *அந்தந்த மாவட்டத்தில் பணியாற்றுபவர் பற்றிய DSR அந்தந்த மாவட்டத்தில் மட்டுமேயிருக்கும். வேறு மாவட்டப பதிவில் சென்று தேடினால் இருக்காது..*

🍇 *ஒருவர் துறை மாறிதலில் சென்றாலோ/ வேறு மாவட்த்திற்கு பணிமாறுதல் பெற்றுச் சென்றாலோ அது குறித்துத் தகவல் தெரிவித்தால் அந்த மாவட்டத்திற்கு DSR அனுப்பி வைக்கப்படும்*

🍇 *RETIREMENT PENSION PROPOSAL அனுப்பும்போது SR BOOK ஐ அனுப்பக்கூடாது. மாறாக DSR ஐ மட்டும் அனுப்பினால் போதும்*

🍇 *ஒருவரிடம் வேறு துறையில் பணியாற்றிய SR/நிதியுதவி பெறும் பள்ளி SR / அரசுப்பள்ளி SR என ஒன்றிற்கு மேற்பட்ட SR இருந்தால் அவை அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்*

🍇 *SR SCAN செய்யப்பட்டதற்கு அடையாளமாக கடைசியாக ஸ்கேன் செய்யப்பட்ட பக்கத்தில் மாவட்டக்கருவூல அலுவலரின் கையொப்பம் முத்திரையுடனிருக்கும்.அதன் பிறகு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பதிவுகளும் முத்திரைக்குப் பின்னுள்ள பக்கங்களில் இடம் பெற வேண்டும்...*

🍇 *SR DETAILS ம் WEBROLL DETAILSம் ஒன்று போலிருக்க வேண்டும்., இல்லையேல் WEBROLL REJECT செய்துவிடும்...*

🍇 *N.O.Cஆதார்எண், சாதனைகள், பெற்றுள்ள விருதுகள் பற்றிய விவரங்கள்DSR ல் இருக்கும்..*

🍇 *எதிர்காலத்தில் MANUAL SR MAINTENANCE இருக்காது*

🍇 *DSR ல் NEXT INCREMENT ,HRA SLAB அனைத்துமிருக்கும்*


🍇 *SCAN முடிந்த 15 நாள் மட்டுமே அப்பதிவு மாவட்ட கருவூல அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும்..அதற்குள் நாம் பிழை திருத்தம் மேற்கொள்ளலாம்..அதன்பின் தானாகவே அதற்கடுத்த அலுவலருக்கு MOVE ஆகிவிடும்,*,

*அதன்பின் நாம் ஏதேனும் பிழை திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருந்தால் ,உயர் அலுவலரின் அனுமதிக்குப்பின் அவரே அதைச் செய்வார்.நாம் அவரின் விசாரணைக்கு உட்பட வேண்டியிருக்கும்*

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024