Wednesday, July 26, 2017

ரூ.100 கோடி புழங்கும் மொய் விருந்து: புதுக்கோட்டையில் களை கட்டுது

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
23:31



புதுக்கோட்டை: புதுக்கோட்டை மற்றும்தஞ்சை மாவட்டத்தில், 100 கோடி ரூபாய் புழங்கும், 'மொய்' விருந்து விழாக்கள், களை கட்டத் துவங்கியுள்ளன.
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை, கை தூக்கி விடும் விதமாக, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில், ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் நடக்கும், 'மொய்'விருந்து விழாக்கள்பிரச்சித்தமானவை.கூடுதல் தொகைகஷ்டப்படும் குடும்பத்தினர் நடத்தும், மொய் விருந்துக்கு வருவோர், தங்களால் இயன்ற உதவியை, 'மொய்' பணமாக வழங்கிச் செல்வர்.
மொய் வழங்குபவர்கள் வீட்டு சுபகாரியங்களின் போது, இவ்வாறு பெறப்படும், மொய் பணத்தை விடகூடுதல் தொகையாக, அதைத் திரும்பசெலுத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மொய் விருந்து விழாக்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில், களைகட்டத் துவங்கியுள்ளது.

முன்பெல்லாம், ஒவ்வொருவரும் தனித்தனியாகத்தான் மொய் விருந்து நடத்துவர்.ஆனால், தற்போது, செலவுகளை குறைக்கும் வகையில், பலரும் ஒரே இடத்தில் கறி விருந்து அளித்து, மொய் பணம் பெறுகின்றனர். ஒவ்வொருவிருந்திலும், பலலட்சங்கள் வசூலாகும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது களை கட்டத் துவங்கியுள்ள மொய் விருந்தில், நூறு கோடி ரூபாய் வரை பணம் புழங்கும் என்றுகருதப்படுகிறது.

வணிகமயம்:

கஷ்டப்படுபவரை தூக்கி விடுவதற்காக நடத்தப்பட்ட மொய் விருந்து, தற்போது வணிகமயமாகி விட்டதாகவும், வரி ஏய்ப்புக்கு சிலர் பயன்படுத்துவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொய் விருந்து பிரச்னைகளால், அவமானத்துக்கு பயந்து, பலர் ஊரை விட்டு ஓடி விடுவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் இப்பகுதியில் சாதாரணமான நிகழ்வுகளாகி விட்டன.

இன்னொருபுறம், மொய்விருந்தில் வசூலித்த பணத்தை, தங்களின்வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும் எனக் கேட்டு, பல வங்கியின் மேலாளர்களும் மொய் விருந்து வைத்தவர்களை முற்றுகையிடும் காட்சிகளையும் இங்கு பார்க்க முடியும்.

No comments:

Post a Comment

HC: Cruelty charges need some proof in divorce cases

HC: Cruelty charges need some proof in divorce cases TIMES OF INDIA KOLKATA 27.12.2024 Kolkata : Allegations of cruelty for seeking divorce ...