Wednesday, July 26, 2017

நடுவானில் எரிபொருள் காலி : விமானம் அவசர தரையிறக்கம்

பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
21:02

மும்பை: நடுவானில் பயணியருடன் பறந்து கொண்டிருந்த, 'ஏர் - இந்தியா' விமானத்தில், எரிபொருள் காலியானதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு கிளம்பிய, ஏர் - இந்தியா நிறுவனத்தின் பயணியர் விமானம், நடு வானியில் பறந்த போது, எரிபொருள் காலியாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது குறித்து, ஏர் - இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தனஞ்ஜய் குமார் கூறியதாவது:

விமானம் கிளம்பும் போது, போதுமான எரிபொருள் இருந்தது. ஆனால், விமானம் கிளம்பியதும், சில தொழிற்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால், அதிக எரிபொருள் செலவாகி விட்டது. இதனால், எரிபொருள் காலியாகும் நிலை ஏற்பட்டதால், அவசரமாக, நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தேவையான எரிபொருள் நிரப்பிய பின், விமானம் கிளம்பி சென்றது. விமானத்தில் தொழிற்நுட்ப பிரச்னை ஏற்படும் வகையில், கவனக்குறைவாக செயல்பட்ட விமானிகள் இருவரும், தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024