Friday, July 28, 2017

திருக்கோஷ்டியூர் ஆடிப்பூர தேரோட்டம்

பதிவு செய்த நாள் 27 ஜூலை
2017
22:07

திருப்புத்துார், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தை முன்னிட்டு இக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம் 11 நாட்கள் நடைபெறும். கடந்த ஜூலை 18ல் கொடியேற்றப்பட்டு உற்சவம் துவங்கியது. தினசரி காலையில் பெருமாள் புறப்பாடும், இரவில் ஆண்டாளுடன் பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.
நேற்று காலை 8:30 மணியளவில் பள்ளியறையிலிருந்து ஆண்டாள், பெருமாள் யாத்ரா தானமாக தேருக்கு புறப்பட்டனர். மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் தேரில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் ஆண்டாளையும் பெருமாளையும் வழிபட்டனர்.
பின்னர் மாலையில் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திர நேரமான 4:40மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. நாளை காலை தீர்த்தவாரியும்,இரவில் தங்கப் பல்லக்கில் பெருமாள் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளலும் நடைபெறும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024