Friday, July 28, 2017

தக்காளி விலை குறைந்தது

பதிவு செய்த நாள் 27 ஜூலை
2017
23:37

காஞ்சிபுரம்:ஆந்திரா, கர்நாடகாவில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரம் சந்தைகளில், தக்காளியின் விலை குறையத் துவங்கியுள்ளது.தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில், தக்காளி போதுமான விளைச்சல் இல்லாததால், கடந்த இரு வாரங்களுக்கு முன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 1 கிலோ தக்காளி, 100 முதல், 120 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால், காஞ்சிபுரத்தில், தரத்திற்கேற்ப, 70 முதல், 90 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது, தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரம் சந்தையில், நேற்று, 50 முதல், 60 ரூபாய் வரை விற்கப்பட்டது.இதுகுறித்து, தக்காளி வியாபாரி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், கடந்த வாரம், கிலோ, 90 ரூபாய் வரை விற்ற தக்காளியை, தற்போது, 50 ரூபாய்க்கு விற்கிறோம்,'' என்றார்.இனி, ஓட்டல்களில் தக்காளி சட்னியை, தாராளமாக எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024