Thursday, July 27, 2017

எலக்ட்ரானிக்ஸ் கடைகளாக மாறும் காஞ்சி பட்டு கடைகள்

பதிவு செய்த நாள் 27 ஜூலை
2017
02:01

பட்டு நெசவுத் தொழில் நலிவால், காஞ்சிபுரத்தில், நெசவுத் தொழிலுக்கு மூலப்பொருட்களை விற்று வந்த, பட்டு கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகளாக மாறி வருகின்றன.

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் பட்டு நெசவு தொழில் உச்சத்தில் இருந்தது. தனியார், கூட்டுறவு சங்க நெசவாளர்களும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்தனர்.தற்போது, நெசவுத்தொழில் நலிவால், நெசவாளர்களும், நெசவு தொழிலை சார்ந்து, தொழில் செய்தவர்களும், தற்போது நலிவடைந்துள்ளனர்.கடந்த, 1990ம் ஆண்டுகளில், காஞ்சிபுரத்தில், பட்டு நெசவுக்கு தேவையான பட்டு, கோறா, சப்புரி, ஜரிகை போன்ற பொருட்களை விற்பனை செய்யும், கடைகள், 500க்கும் மேற்பட்டவை நல்ல முறையில் லாபகரமாக இயங்கின.

தற்போது, 50க்கும் குறைவான கடைகளே உள்ளன. குறிப்பாக சங்கூசா பேட்டை, எண்ணெய்காரத்தெருவில், வீட்டின் மாடிக்கு செல்லும் படியின் கீழ், சிறிய இடம் இருந்தாலும், அந்த இடத்திற்கும், வாடகைக்கு இடம் கிடைப்பதில் போட்டாபோட்டி நிலவியது.அந்த அளவிற்கு, இப்பகுதியில், பட்டு கடைகளே அதிகளவில் ஆக்ரமித்திருந்தன. கடை உரிமையாளர்களில் சிலர், தங்களின் பெயர்களுக்கு முன், 'பட்டுக்கடை'என, அடைமொழியாக வைத்துக்கொண்டவர்களும் உண்டு.

பட்டு நெசவு தொழில் நலிவடைந்ததால், பெரும்பாலான நெசவாளர்களும், நெசவு தொழில் சார்ந்தவர்களும் தற்போது மாற்றுத்தொழிலுக்கு நாடிச்சென்றனர்.அதுபோல, பட்டுநெசவுக்கு தேவையான மூலப்பொருட்களை விற்பனை செய்து வந்த பட்டு கடைகள் எல்லாம், தற்போது மொபைல் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் கடைகளாக மாறி விட்டன.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024