Sunday, July 30, 2017

ராகிங்'கை தடுக்க கல்லூரிகளுக்கு அறிவுரை

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
19:10

கல்லுாரி மற்றும் பல்கலைகளில், 'ராகிங்'கை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்குமாறு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து, கல்லுாரிகள், பல்கலைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். பழைய மாணவர்கள், புதியவர்களை, 'ராகிங்' செய்யும் நடவடிக்கை, கிரிமினல் குற்றம். இது குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.* முதல்வரின் அறை முன், புகார் பதிவு புத்தகம் வைக்க வேண்டும்* கல்லுாரி வளாகம் முழுவதும் தெரியும்படி, கண்காணிப்பு கேமரா, செயல்பாட்டில் இருக்க வேண்டும்* மாணவர்களுக்கு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடத்தி, 'ராகிங்' நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்* மாணவர்களிடமிருந்து புகார் வந்தால், உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்* 'ராகிங்' கண்காணிப்பு கமிட்டி அமைத்து, கல்லுாரி வளாகத்தில், ஆசிரியர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு பல அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. - நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024