Thursday, July 27, 2017

ரூ.1500 மின்கட்டணமா.. ரேஷன் சலுகை ரத்து: கேரள அரசு அதிரடி !!

மாதம் ரூ.1500 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களின் ரேஷன் சலுகைகளை ரத்து செய்ய உள்ளதாக கேரள அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

*சம்பளம் ‛கட்':*

இதுதொடர்பாக கேரள அரசு தலைமைச் செயலாளர் நளினி பிறப்பித்த உத்தரவு: அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது ஆதார், ரேஷன் கார்டு,
பான்கார்டு போன்றவற்றின் நகல்களை, தாங்கள் பணிபுரியும் அரசு அலுவலகங்களில் வரும் 31ம் தேதிக்குள் கண்டிப்பாக ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு 1ம் தேதி சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

*ரேஷன் சலுகை ரத்து:*

மேலும் கேரளாவில் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களும், மாதம் ரூ.1500 மற்றும் அதற்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கு ரேஷன் சலுகைகளும் அதிரடியாக ரத்து செய்யப்பட உள்ளது. இவர்கள் ரேஷன் கடைகளில் அரிசி மட்டும் பெற்றுக் கொள்ளலாம். மற்ற மானிய பொருட்கள் எதுவும் வழங்கப்படமாட்டாது. விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
SSTA

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...