Thursday, July 27, 2017

சம்பளத்துடன் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு: சென்னை மேக்ஸ்டர் நிறுவனம் அறிமுகம்


சென்னையைச் சேர்ந்த டிஜிட்டல் பத்திரிகை நிறுவனமான மேக்ஸ்டர், அங்கு பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மாதத்தில் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். பெண் ஊழியர்களின் வசதிக்கு ஏற்றவாறு, மாதவிடாய்க் காலத்தின் முதல் அல்லது இரண்டாம் நாளில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

அதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் அவர்களின் மேலதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். விடுப்பு தேவைப்படும் நாளில் காலை 10 மணி அல்லது அதற்கு முன்னதாகத் தெரிவிக்க வேண்டும். ஈமெயில் வழியாகவோ குறுஞ்செய்தி வழியாகவோ கூறினால் போதுமானது.
மாதவிடாய் விடுப்புக்கு சென்னையில் விடுப்பு வழங்கும் முதல் நிறுவனம் மேக்ஸ்டர். இந்திய அளவில் 4-வது நிறுவனமாக இருக்கிறோம். இதே கொள்கையை மற்ற நிறுவனங்களும் பின்பற்றும் என்று நம்புகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024