Friday, July 28, 2017

பார்மஸி கல்லூரி சேர்க்கையை குறைக்க உத்தரவு : மாணவர்கள் பாதிப்பு

பதிவு செய்த நாள் 27 ஜூலை
2017
23:11

மதுரை: சென்னை, மதுரை அரசு பார்மஸி கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை குறைக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி (ஏ.ஐ.சி.டி.இ.,) கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.பார்மஸி கல்லுாரிகளில் இளங்கலை பிரிவுக்கு 60, முதுகலையில் மதுரைக்கு 24, சென்னை 40, டிப்ளமோவில் தலா 120 மாணவர்கள் சேர்க்கப்படுவர். இவ்விரு அரசு கல்லுாரிகளிலும் தொழில்நுட்ப கல்வி கவுன்சில் நிர்ணயித்துள்ள சம்பளத்தை முதல்வர், பேராசிரியர்களுக்கு மாநில அரசு வழங்கவில்லை. விதியை மீறி தற்காலிக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால் மாணவர்களின் கல்விதரம் பாதிக்கப்படும் என கவுன்சில் எச்சரித்ததும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.இதையடுத்து, இவ்விரு கல்லுாரிகளிலும் டிப்ளமோ தவிர்த்து, பட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கையை மொத்த எண்ணிக்கையில் 10 சதவீதத்தை குறைக்க கவுன்சில் உத்தரவிட்டுஉள்ளது.

முதல்வர் ஒருவர் கூறுகையில், ''தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை பார்மஸி கல்லுாரிகளுக்கு தருவதில்லை. விதிமுறையை பின்பற்றாததால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க கவுன்சில் உத்தரவிட்டது. இதனால் ஏழை, நடுத்தர மாணவர்கள் பாதிக்கப்படுவர்,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024