Thursday, July 27, 2017

ஏழு மாதங்களில் 71 போலி டாக்டர்கள் கைது

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:06

தமிழகம் முழுவதும், ஏழு மாதங்களில், 71 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும், போலி டாக்டர்கள் நடமாட்டம் குறித்து, சுகாதார பணிகள் குழு கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழு மாதங்களில், 71 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் அலுவலக கண்காணிப்பாளர், கமலகண்ணன் கூறியதாவது: போலி டாக்டர்கள் பெயர் பலகை வைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் தரும் மருந்து சீட்டிலும், அவர்களின் பெயர் இருக்காது. மேலும், மருத்துவ கவுன்சில் பதிவு எண், ஐந்து அல்லது ஆறு இலக்கு எண்களாக இருக்கும். இதற்கு குறைவான எண்கள் இருந்தால், அவர்கள் போலி டாக்டர்கள் என, அடையாளம் காண முடியும்.போலி டாக்டர்கள் குறித்து, '104' என்ற எண்ணில், பொதுமக்கள் தகவல் தரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...